முதல் சந்திப்பில் இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்கள். : உங்கள் காதல் நிச்சயம் கைகூடும்...!

February 12, 2016


காதல் என்றுமே உங்களுக்குப் புதிதாகத்தான் தெரியும். அது உங்களுக்குத் தரும் உணர்வுகளும் புதிதாகத்தான் இருக்கும்.

இதற்குக் காரணம் காதல் வயப்பட்டாலே உங்களுக்குள் இருக்கும் ரசிக்கும் தன்மை சடாரென்ரு விஸ்வரூபம் எடுத்து உங்களை ஆளத்தொடங்கும்.

இந்தக் காதலில் சிக்காதவர் என்று யாருமே இல்லை.

இதனால்தான் நீங்கள் விரும்பும் நபரையோ அல்லது விரும்பும் பொருளையோ அனுஅனுவாகாக ரசிப்பீர்கள்.

இந்த ரசிப்பு தான் அவரை சகிப்பு இல்லாமல் பார்க்கத் தூண்டுகிறது. அவரின் மேல் உள்ள ஈர்ப்பை அதிகமாக்குகின்றது.

ஒரு சிலருக்கு பார்த்த உடனே காதல் வரும். சிலருக்கு பழகப் பழகக் காதல் மலரும். காதல் வருவது சுலபம்.

ஆனால் அதை அர்த்தமுள்ளதாக்குவதுதான் அதில் ஒளிந்திருக்கும் இன்பம்.

சரி இந்தக் காதலில் ரசனை மழை பொழிவதற்கு முன் காதலின் முதல் படி சந்திப்புதான்.

சிலர் தனக்கு பிடித்த நபரை முதல் முதலில் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தவுடனே சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிடுவர்.

தலை கால் புரியாமல் தவிப்பர். அந்த பதற்றத்துடனே சந்திக்கச் சென்று கடைசியில் காதல் கைகூடாமலே போனதும் உண்டு.

உங்கள் முதல் சந்திப்பு வெற்றி பெற வேண்டும் என்றால் சில விசயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.


நேரில் சென்று அழையுங்கள்
நீங்கள் சந்திக்கப் போகும் பெண்ணை நீங்களே அவரின் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லுங்கள்.

இன்றைய சூழலில் பல பெண்கள் சொந்த வாகனம் வைத்துள்ளனர். நீங்கள் இருவரும் சந்திக்கச் செல்லும் இடத்தின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அவரே வந்து விடுவார்.

ஆனால் நீங்கள் அந்தப் பெண்ணை அழைத்து வர சிரத்தை எடுத்துக் கொள்வது நீங்கள் அவரைப் பற்றி சற்று தீவிரமாக யோசிக்கிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தும்.

ஒரு வேளை நீங்கள் கேட்டும் அவர் தானாகவே நீங்கள் சந்திக்க வேண்டிய இடத்திற்கு வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டால் உங்களுக்கு வேலை மிச்சம்!

கண்ணைப் பார்த்து பேசுங்கள்
பெண்களுக்கு கண்களைப் பார்த்து பேசும் ஆண்களைத் தான் பிடிக்கும்.

மேலும் உங்கள் கண்களின் பார்வையைத் தான் அவர்கள் அதிகம் கவனிப்பார்கள்.

ஆண்களே முடிந்தளவு பெண்களின் கண்களைப் பார்த்து பேசுங்கள். அது உங்களின் ஆளுமையைக் காட்டும். பெண்கள் நமது கண்கள்!


அதிகமாக கிண்லடிக்காதீர்கள்
அவர்கள் உடன் சகஜமாக பேசுகிறேன் எனச் சொல்லி அவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு கிண்டலடிகாதீர்கள்! பிறகு அதுதான் உங்களுக்கு முதலும் கடைசியுமான சந்திப்பாக இருக்கும்.
 

குறித்த நேரத்திற்கு சென்று விடுங்கள்
முதல் சந்திப்பில் தயவு செய்து தாமதமாக செல்லாதீர்கள். உங்களுக்கு பல முக்கியமான வேலைகள் இருந்தாலும் அன்று இந்த சந்திப்புதான் உங்களுக்கு தலையாய வேலையாக இருக்க வேண்டும்.

மழை, போக்குவரத்து நெரிசல், வாகன கோளாறு என பல சவால்கள் உங்கள் வாழ்க்கையில் அன்றுதான் விளையாட ஆயுத்தமாக இருக்கும்.

ஆக சற்று முன்னமே வீட்டிலுருந்து கிளம்பி அவரைக் காணச் செல்லுங்கள்.

ஒரு வேளை தாமதமாகி விட்டால் பொய்யாக பல காரணங்கள் சொல்லாமல், உடனே மன்னிப்பு கேட்டு விடுங்கள். சுலபம்.
 

தோற்றத்தை பாராட்டுங்கள்
நீங்கள் சந்திக்கும் நபரின் தோற்றத்தைப் பாராட்டுங்கள். பெண்ணாக இருந்தால் ' நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என்றும, ஒரு ஆணைப் பார்த்து ' நீங்கள் ஸ்மார்ட் ஆக இருக்கிறீர்கள்' என்றும் சொல்லுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் பெண்களின் ஒப்பனை சற்று அதிகமாக இருக்கிறது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.

ஆண்களின் உடை, சிகையலங்காரம் உங்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் ஒன்றுமே நடகாதது போல் இருந்து விடுங்கள்.

வீட்டிற்கு வந்தப் பிறகு நீங்கள் வயிறு வலிக்க எவ்வளவு வேண்டுமானாலும் சிரித்துக் கொள்ளலாம்.


ஆண்கள்தான் செலவு செய்ய வேண்டும்
ஒரு பெண்ணை முதன் முதலில் நீங்கள் சந்திக்கும் போது ஆண்கள் அவர்களுக்காக செலவு செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள்.

முதன் முறையே பெண்கள் செலவு செய்ய நேர்ந்த்தால் இந்த ஆண் மிகவும் கஞ்சத்தனமிக்கவனாக இருக்கிறான் என உங்களுக்கு முத்திரை குத்தி விடுவார்கள்.

அடுத்தடுத்த சந்துப்பின் போது நீங்கள் இருவரும் மாறி மாறி செலவு செய்துக் கொள்ளலாம்.

ஆனால் முதல் சந்திப்பில் ஆண்களே உங்கள் பணப்பையை கனமாக வைத்துக் கொள்ளுங்கள்

மிதமான உடையலங்காரம்
நீங்கள் முதல் சந்திப்பின்போது அவரைக் கவர வேண்டும் என அதிகமான ஒப்பனையோ உடையலங்காரமோ செய்துக் கொண்டு உங்களுக்கே உங்களை அடையாளம் தெரியாது போய் நிற்காதீர்கள்.

நீங்கள் நீங்களாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். உங்கள் தோற்றத்தின் மீது என்றுமே நம்பிக்கை கொள்ளுங்கள்.