ஒரு பெண்ணின் பார்வையில் இத்தனை அர்த்தங்களா? : நீங்களும் பாருங்க...!

March 10,2016பெண்ணின் பார்வை அகலமானது என்பதால் யாரும் கண்டறிய முடியாதபடி, ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்துவிட முடிகிறது.

ஆனால், ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும், கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

இதனால், குற்றம் சாட்டப்படும்போது, பெண்களை விட ஆண்கள் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.


காதல் பார்வை
ஒரு அறையின் குறுக்கே இருக்கும் ஒரு ஆணின் கவனத்தைக் கவர ஒரு பெண் அவனது பார்வையை 2 அல்லது 3 முறை சந்தித்து விட்டு வேறுபக்கம் அல்லது கீழே பார்ப்பாள்.

இந்த பார்வையே அவளது காதல் ஆர்வத்தை வெளிபடுத்த போதுமானதாக இருக்கிறது.

ஒரு பெண்ணின் முதல் பார்வையை புரிந்து கொள்ள முடியாத திறமையுடன் ஆண்கள் இருப்பதால், பெண்கள் சராசரி ஆணின் கவனத்தை ஈர்க்க 3 முறை பார்க்கிறார்கள்.

மெதுவாக புரிந்து கொள்ளும் ஆணின் கவனத்தை ஈர்க்க 4 முறையும், இன்னும் சிலரை 5 முறையும் பார்க்க வேண்டிள்ளது.


கவர்ச்சிக் கன்னிகளின் பார்வை
கண் இமையை கீழிறக்கி, அதே சமயம் புருவங்களை தூக்கி, மேலே பார்த்து உதடுகளை லேசாக பிரிப்பது பல நுற்றாண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வரும் கவர்ச்சி பார்வையாக உள்ளது.

இதனால், அவர்களது புருவத்திற்கும், இமைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாவதோடு, அவர்களுக்கு ஒரு `ரகசியமான தோற்றம்’ ஏற்படுகிறது.


அதிகாரபார்வை
அதிகாரத் தோரணையுள்ளவர்கள் தலையை பின்னே சாய்த்து முக்கின் ஓரமாக சாய்த்து பார்பார்கள்.

தங்களது முக்கியத்துவம் உணரபடவில்லை என்று உணர்பவர்களும் இப்படி பார்க்கலாம். பேசும்போது யாராவது இப்படி செய்தால், நீங்கள் அவர் கூறிய செயலை சரியாக செய்யவில்லை.

அதற்கு `இன்னும் புதிய உத்தி தேவை’ என்று அர்த்தம்.

புருவத்தைக் கீழிறக்கும்படி பார்ப்பது, மற்றவரை அடக்கவும் முரட்டுத்தனத்தை வெளிபடுத்தவும் செய்யபடுகிறது.

அதேசமயம் புருவத்தை உயர்த்துவது, பணிவின் அறிகுறி.