தீபிகா படுகோனேயின் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய உலக அழகி

November,28,2017

தீபிகா படுகோனேயின் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய உலக அழகி மனுஷி ஷில்லாரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

2017ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி, சீனாவின் சான்யா சிட்டியில் நடைபெற்றது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (21), உலக அழகியாக பட்டம் வென்றார். 108 நாடுகள் பங்கேற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அழகி உலக அழகிப் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு மகுடம் சூட்டியுள்ளார். இதற்கு முன் 2000ம் ஆண்டில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டத்தை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தீபிகா படுகோனேயின் கோலியின் ஹி ராஸ்லீலா ராம் லீலா படத்தின் நகடா பாடலுக்கு டான்ஸ் ஆடி பார்வையாளர்களை தன்னுடைய நடனத்தால் அசத்தியுள்ளார். அதோடு, மற்ற அழகிகளையும் தன்னுடன் சேர்ந்து ஆட வைத்துள்ளார். தற்போது அவர் ஆடிய டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.