தவிர்க்­க­வேண்­டிய உணவு கல­வைகள்.

03-05-2016

புதுப்புது யுக்­தி­களை பயன்­ப­டுத்தி புது­மை­யான உண­வுகள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

பார்க்க அழ­கா­கவும், நாவிற்குச் சுவை­யா­கவும் இருந்தால் மட்டும் போதும் என நினைத்து தயா­ரிக்­கப்­படும் உண­வுகள் நம் ஆரோக்­கி­யத்தை பாதிக்­கின்­றன.


ஒரு வார­மாகச் சேர்த்து வைக்­கப்­பட்ட சிக்­கனில் கலரும், வினி­கரும் சேர்தத்து பழைய சிக்கன் கூடப் புதிய சிக்­க­னாக நமது உணவுத் தட்டு­களில் பரி­மா­றப்­ப­டு­கி­றது.

புதிய பரி­ணா­மத்தில் உண­வு­க­ளாகி இன்­றைய தலை­மு­றையை ஈர்த்­தாலும் இது சரி­யான உணவு முறையா என்­பது கேள்­விக்­கு­றியே. ஆனால் இது நமக்கு உணவா? அல்லது விஷமா? என்­ப­தற்கு விளக்­க­ம­ளிக்­கிறார் தமி­ழ­கத்தின் ஆயுர்­வேத மருத்­துவர் சாந்தி விஜய்போல்.

காலத்­திற்­கேற்ப உண­வுகள்

அந்­தந்த காலத்திற்கு ஏற்றதான  உணவு­களை உண்ண வேண்டும். காலம் கடந்து உணவருந்துதல் தவறு. இரவில் உணவுடன் தயிரை சேர்த்துக் கொள்­வதால் சமிபாட்டுப் பிரச்சினை அதி­க­ரிக்கும்.

அவ்வாறு இரவில் தயிரை உட்கொண்டால், ஒரு மைக்ரோ அள­விற்குக் கூட சமிபாடு அடையாது. இரவில் அவ­சியம் தவிர்க்க வேண்­டிய உண­வு ­ தயிரும், கீரை­யுமே உள்­ளது.

கோடைக் காலம்
இக்­கா­லத்தில் எளிதில் சமிபாட டையக்கூடிய உண­வு­களைத் தேர்ந்­தெடுத்து உட்கொள்வது நல்­லது.

கோடை காலத்தில் சூழலும் வெப்­ப­மாக இருப்­பதால் எளிதில் சமிபாடடையக் கூடிய உண­வு­களை உட்கொள்வது நல்­லது.

மழைக் காலம்
அடிக்­கடி பசி எடுக்கும் காலம் இது. ஆகையால் நீண்ட நேரம் சமிபாடடையும் படியான உண­வு­களை உட்கொள்ளல்  வேண்டும்.

நிலத்­திற்­கேற்ப உண­வுகள்
ஒவ்­வொரு நிலத்­திலும் ஒவ்­வொரு சுவை இருக்கும். அந்­தந்த இடங்­களைப் பொறுத்து அங்கு விளையும் பொருட்­களின் சுவை மாறு­படும்.

 அது­போன்று நம் நாட்டில் விளையும் காய், கனி­களை உண்­ணு­வதே நல்­லது.  நாட்டுப் பழங்கள், நாட்டுக் காய்­க­றிகள், கீரை வகைகள், பருப்­பு வகைகள், எண்ணெய் வகைகள் என அனைத்தும் நம் நாட்டில் விளையக் கூடி­ய­தா­கவும், தயா­ரிக்­கப்­ப­டு­வ­தா­கவும் இருப்­பதே ஆரோக்­கி­யத்தை அளிக்கும்.

எதிர் எதிர் குணங்கள் கொண்ட உண­வுகள்
குளிர்ச்­சியும் சூடும் போன்ற எதி­ரெதிர் குணங்கள் கொண்ட உண­வு­களைச் சேர்த்துக் கொள்ளுதல்.

பால் , கொள்ளு, தேன் மற்றும் நெய் போன்ற இரு குணங்கள் கொண்ட உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உட்கொண்டால்  ஸ்லோ பொய்சன் (slow poison) ஆகும்.

சில மூலிகை மருத்­து­வத்தில் தேனும் நெய்யும் கலந்து உட்கொள்வது வழக்கம். அவர்கள் கூட சம அளவு தேனையும் நெய்­யையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டில் ஒன்றின் அளவை குறைத்து சாப்­பி­டு­வது அவ­சியம். இல்­லை­யெனில் இதற்கு ஒரு தனி மருத்­துவம் செய்ய வேண்­டி­யி­ருக்கும் என கூறியிருக்கிறார்கள். 

மில்க் ஷேக்­குகள்
இனிப்பு சுவை கொண்ட பழங்­க­ளுடன் (அப்பிள், வாழை) பால் சேர்ப்­பது ஓர­ள­விற்குப் பர­வா­யில்லை.

பழங்­க­ளுடன் பால் சேர்க்கும் மில்க் ஷேக்­கிற்குத் தனியான வர­வேற்பு உண்டு. சிட்ரஸ் (எலு­மிச்சை, ஒரேஞ்ச்) பழங்­க­ளுடன் பால், மெலான் பழங்­க­ளுடன் பால் ( தர்ப்­பூ­சணி, பப்­பாளி, கிர்ணி) போன்­ற­வற்றைச் சேர்க்­கவே கூடாது.

புளிப்பு சுவை கொண்ட மாதுளை பழத்­துடன் பால் சேர்த்து மில்க் ஷேக்­காக அருந்தக் கூடாது.


பிரி­யாணி போன்ற பாரமான உணவுகளை உட்கொண்ட பின்னர் சூடான டீ ஒன்றை அருந்தலாம். ஆனால் குளிரான பாணங்களை அருந்தக் கூடாது.

 
மா சத்­தான உணவுடன் பருப்பைச் சேர்க்­கலாம். பருப்பை வேக வைக்கும் போது மஞ்சள், நல்­லெண்ணெய், வெந்­தயம், பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும்.


மா சத்­து­களும், காய்­க­றி­களும், ப்ரவுன் அரி­சியும் சேர்த்துச் சாப்­பி­டலாம். புரதச் சத்துள்ள உண­வையும் காய்­க­றி­க­ளையும் சேர்க்­கலாம்.


கஞ்சி வகையானவற்றை அருந்துவதற்கு முன்­னரும் பின்னரும் நீர் அருந்துதலை தவிர்த்துக் கொள்ளலாம்.  காலையில் எழுந்தவுடன் பருவகால பழவகை களை ஒரு கப் அளவிற்குச் சேர்த்துக் கொள்ளலாம்.
 
பழச்சாறாகவோ மில்க் ஷேக்காகவோ உட்கொள்வதை விட பழங்களை தனியாகவே உட்கொள்வது நல்லது.