உடல் எடை அதிகமானவர்கள் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள.....

03-05-2016

உடல் எடை அதி­க­மா­ன­வர்கள் உடல் சோர்­வாக இருப்­ப­தாக உணர்­வார்கள். உடல் எடை குறைந்­த­வர்கள் செய்­கின்ற சில வேலை­களை உடல் எடை அதி­க­மா­ன­வர்கள் செய்ய மிக சிரமப்­ப­டு­வார்கள்.

சிலர் படி­களில் ஏறக்கூட சிரமப்­ப­டு­வார்கள். இவ்­வாறு இருப்­ப­வர்கள் தாம் சோர்­வாக இருப்­ப­தாக உணர்­வார்கள்.


ஒருவர் நோர்­ம­லா­கவோ அல்­லது சோர்­வா­க­வாகவோ இருக்­கி­றார் என்­பது குறித்து தமி­ழக டாக்டர் நியூட்­ரீ­ஸி­யனிஸ்ட்டான  ஸ்ரீமதி வெங்­கட்­ராமன் தெரி­வித்­துள்ளார்.

1. பருமனாக இருக்­கி­ன்ற­வர்கள் எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் உணவைக் குறைத்துக்  கொள்ளக் கூடாது.

அதனால்   உடல் வளர்­சியில் மாற்றம் ஏற்­பட்டு மேலும்  பருமனாவார்கள். மேலும் இவர்கள்  போது­மான அளவு, தகுந்த இடை­வெ­ளி­யில் உணவு உண்­பது முக்­கியம்.

2. பிட்­டாக இருப்­ப­தற்கு முதல் விடயம் தண்ணீர். விற்­ற­மின்கள் தண்­ணீ­ரி­லி­ருந்­து தான் நமக்கு  கிடைக்­கின்­றது.

ஆனால் எல்­லோரும் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும் என்று கூறு­வது தவறு.


ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இந்த அளவு மாறு­படும்.உங்­க­ளு­டைய சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் போது­மான அளவு தண்ணீர் குடிக்­கி­றீர்கள் என்று அர்த்தம். இல்லை மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் போத­வில்லை என அர்த்தம். அதனால் உங்கள் உட­லுக்குத் தேவை­யான அளவு தண்ணீரை அருந்துங்கள். 


3. எப்­போது உடல் உழைக்கத் தொடங்­கு­கி­றதோ அப்­போ­துதான் நீங்கள் ஆரோக்­கி­ய­மாக, பிட்­டாக இருப்­பீர்கள்.

தினமும் கண்­டிப்­பாக அரை­மணி நேரம் நடக்க வேண்டும். அதுவும் அதி­காலை வெயிலில் நடந்தால் உங்­க­ளுக்கு விற்­றமின் - டி கிடைக்கும். நமது உடலில் கல்­சியம் சேர்­வ­தற்கு  இந்த விற்­றமின் டி  மிகவும் தேவை.

 வெயிலில் அதிக நேரம் இல்­லாமல் இருப்­பதால் தான் பல­ருக்கு இன்று விற்­றமின் -டி பிரச்­சினை வரு­கி­றது.


அதனால் மூட்டு வலி, முதுகு வலி ஏற்­ப­டு­கி­றது. பத்து நாள் தொடர்ந்து நடை­ப­யிற்சி செய்தால் படிக்­கட்டில் ஏறும்போது மூச்சு வாங்­கு­வது நின்று விடும்.


4. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்­கி­றீர்கள் என்றால் இன்னும் பிரச்சி­னை தான். நீங்கள் என்­னதான் மெலிவாக இருந்­தாலும் உட்­கார்ந்த இடத்­தி­லேயே வேலை பார்ப்­பதால் தொப்பை போடு­வது சக­ஜ­மான ஒன்­றாகி விட்­டது.


இரண்டு மணி நேர இடை­வெ­ளி­யி­லா­வது எழுந்து மாடிப்­படி ஏறி இறங்­கு­வது,  ஐந்து நிமிடம் நடப்­பது என கொஞ்­ச­மா­வது உட­லுக்கு வேலை கொடுங்கள்.

இல்­லை­யென்றால் தசைகள் வேலை செய்­யாமல்  அடிக்­கடி மரத்துப் போவது, எலும்­பு­களில் வலி போன்­றவை ஏற்படத் ­தொ­டங்கும்.

என்­னதான் நீங்கள் வேலை செய்­யாமல், உட்­கார்ந்த இடத்­தி­லேயே வேலை செய்­தாலும் உடல் வலிப்­ப­தற்கு நீங்கள் உட­லுக்கு வேலை கொடுக்­கா­த­துதான் காரணம்.


5. மாலை நேரம் ஆனதும் உடல் மிகவும் சோர்­வ­டை­கி­றது என்றால் பெண்­க­ளுக்கு இரத்­த­ச் சோகை பிரச்சினை இருக்­க­க்கூடும்.

உங்­க­ளது இரத்­தத்தில் ஈமோ­கு­ளோ­பினின் அளவைப் பரிசோதனை செய்து பாருங்கள். ஆண்கள் சீனியின் அளவைப் பரிசோதனை செய்­வது நல்­லது.


6. பிட்­டாக இருப்­ப­தற்கு கார்­போ­ஹைட்­ரேட்டை குறைக்க வேண்டும். உணவில் கொழுப்பு சேர்க்கக் கூடாது என எதையும் ஒதுக்­கக்­கூ­டாது.

 புரோட் டீன், விற்ற மின், கார்போ­ஹைட்ரேட்  என அனைத்தும் சேர்ந்த சமச்சீரான உணவை உண்­பது,புரோட்டீன், விற்றமின்,  கார்போஹைட்ரேட்,  என அனைத்தும் சேர்ந்த சமச்சீரான உணவை உண்பது, சீரான உடல் உழைப்பு,  மூச்சுப்பயிற்சி, தேவையான தூக்கம் இருந்தால் நீங்க பருமனாக இருந்தாலும் சரி, மெலிவாக  இருந்தாலும் சரி பிட்­டாக உண­ர்­வீர்கள்.