காய்ச்சல் வந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் : அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய சில குறிப்புகள்

June 07, 2016


நம் உடலில் கிருமிகள் வந்துவிட்டால், நம் நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றை அடையாளம் கண்டு, அவர்களை எதிர்த்து போராடும். அப்போது உடல் வெளியிடும் வெப்பமே காய்ச்சல்.

காய்ச்சல் வந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று என்ன மாதிரியான காய்ச்சல் என தெரிந்து கொள்ளுங்கள்.

சாதரண வைரஸ் காய்ச்சலாக இருந்தால், வீட்டிலேயே எவ்வாறு கிருமிகளை விரட்டி காய்ச்சலை சரிபண்ணலாம் என பார்க்கலாம் வாருங்கள்.

நீர் அதிகம் குடிக்க வேண்டும் :
பொதுவாய் காய்ச்சல் வந்தால், நிறைய பேர் நீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். குளிர் ஜுரம் வந்துவிடும் என பயப்படுவார்கள். அது தவறு. காய்ச்சல் வந்தால், உடலில் அதிகப்படியான வெப்பம் இருக்கும். அதனை தணிக்க, நீர் அருந்த வேண்டும். இத்னால் வெப்பம் மூளையை பாதிக்காமல் இருக்கும்.

திரவ உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் :
காய்ச்சலின் போது ஜீரண உறுப்புக்கள் மிக மெதுவாகதான் வேலை செய்யும். ஆகவே நிறைய திட உணவுகளை உண்ணுவதை தவிர்த்து, கஞ்சி பழச் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். எளிதில் ஜீரணமாகக் கூடிய திட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்த்துவது காய்ச்சலை அதிகரிக்கச் செய்யும்.

 

மிளகுத்தூள், 2 பல் பூண்டு, தேன் ஆகியவற்றை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், கிருமிகள் வேகமாய் அழியும். அதேபோல் மிளகு, திப்பிலி, சுக்கு சமஅளவு போடி செய்து தேனில் சாப்பிட குணமாகும்.

வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரினை குடித்தாலும் காய்ச்சல் விரைவில் சரியாகும்.

துளசி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து கால் லிட்டர் அளவு சுண்டியபின் வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

சளி காய்ச்சலால் அவதிப்பட்டால், நிலவேம்பு பொடியினை இரு டம்ளார் அளவு நீரில் போட்டு, ஒரு டம்ளார் அளவு சுண்ட வைத்து அதனை குடித்தால், கபம் இளகும்.

துளசி இலைச்சாறு இஞ்சி சாறு சம பங்கு கலந்து கசாயம் செய்து நான்கு வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வாணிலியில் வறுத்து, பின் கால் லிட்டர் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நீர் ஒரு டம்ளர் அளவு வற்றிய பின் ஆற வைத்து குடித்தால், எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.

ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் ,வாரக்கணக்கில் நீடித்து வரும் காய்ச்சலும் குணமாகும்.

நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சல் இருந்தால், சிறிது மிளகைத் தட்டி அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குளிர் காய்ச்சல் விடுபடும்