சிரி... சிரி... சிரி...

April 10, 2015

டாக்டர்: உனக்குப் பார்த்த சிகிச்சைக்குத் தாத்தாவிடம் பணம் வாங்கிக்கச் சொல்றயே? ஏன்?
          நோயாளி: நீங்கதானே டாக்டர் பரம்பரை நோய் என்றீர்கள்?


ஒருத்தி: உன்னிடம் 66 புடவைகள் இருக்குன்னு சொல்ற.. மூணு புடவையைத்தானே மாற்றி மாற்றி கட்டுற..?

  மற்றவள்: ஆமாடி... 6+6=12 ; 1+2=3 அவ்வளவுதான்.


"ராஜான்னு அடுத்த தெருவுல ஒரு டாக்டர் இருக்கார். மோசமான கண்டிஷன்ல போறவங்களைக்கூட பிரமாதமா ஆக்கிடுவார்...''

            "இந்த டாக்டர் எப்படி...?''

          "சின்ன பிரச்சினையோடு போறவங்களைக்கூட  பிரேதமாக்கித்தான்              அனுப்புவார்''