சிரி... சிரி...சிரி...

March 08, 2015.

 


"பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்?''
"தெரியுமே... ஏன் கேட்கறீங்க?''

"இல்லை... பார்வை நேரம் மாலை 6 மணி முதல் எட்டு மணி வரைன்னு போர்ட் வச்சிருக்கீங்களே... அதான் கேட்டேன்''

******(நகைக்கடன் தரும் வங்கியில்)
 
"சார் நகைக்கு லோன் வேணும். கிடைக்குமா சார்?''
"எவ்வளவு வேணும் உங்களுக்கு?''
"பொண்ணு கல்யாணத்துக்கு 10 பவுன் வாங்கணும். அதுக்கு எவ்வளவு தேவையோ அதைக் குடுங்க சார்''

****** "நம்ம வீட்டு ரகசியம் வெளியில் தெரிஞ்சிடக் கூடாதுடி''
"அப்புறம் ஏங்க நான் அடிச்சா நாலு தெருவுக்குக் கேக்கிற மாதிரி கத்தி மானத்தை வாங்குறீங்க?''

******"டேய் நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறேன். கண்டிப்பா நீ வரணும்''
"உனக்கொரு கஷ்டம்னா நான் வராமல் இருப்பேனா? கண்டிப்பா வர்றேன்''

******அதிகாரி: உங்க கடைசி ஆசை என்ன? சொல்லுங்க... நிறைவேற்றி வைக்கிறோம்.
தூக்குத்தண்டனை கைதி: அதெல்லாம் உங்களால முடியாது சார்... டிவியில ஒரு நல்ல நாடகம் பார்த்துட்டு சாகணும்.

******"சினிமா தியேட்டர்ல ஏன் இஞ்சி மிட்டாய் தர்றாங்க?''
"கதையை ஜீரணிக்கத்தான் ''

******"என்னப்பா சர்வர், வடை கறுப்பா இருக்கு?''
"இதுதான் சார் வடை கரி''