சிரி... சிரி...சிரி...

May 21, 2015

"டெய்லர் கடையில எதுக்கு கார்பெண்டர்?''
"ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்கவாம்!''

*********


நண்பர்:  ஹை-வோல்டேஜ் கரண்ட் திடீர்ன்னு வந்ததாலே எங்க தெருவில் உள்ள எல்லா வீட்டு டி.வி.க்களும் அவுட்டாயிடுச்சிங்க!

மற்றவர்: அப்ப எல்லார் வீட்டிலேயும் பரிபூரண நிம்மதி நிலவுதுன்னு சொல்லுங்க!

*********


"டாக்டர் எனக்கு மூலம்''
"பேஷ்... பேஷ்... நானும் அதே ராசிதான். ஆனால் பூராடம் நட்சத்திரம்''

 *********


"எங்கம்மா தடுமாறி விழுந்தப்ப நீ தூக்காம வேடிக்கை பார்த்தியாமே!''
"டாக்டர்தான் என்னை வெயிட் தூக்க கூடாதுன்னு சொல்லிட்டாரே...''