அலுவலகத்தில் பகுதி நேர வேலை பார்க்கும் பெண்களா நீங்கள்? : ஆபத்து உங்களை அண்மித்து விட்டது

April 26, 2016


அலுவலகங்களில் பகுதி நேர வேலை(Part-time job) பார்க்கும் பெண்களுக்கு பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக சுவிட்சர்லாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளவில் பகுதி நேர வேலைகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முன்னணி நாடுகளில் ஒன்றாகதிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில்,சுவிஸில் உள்ள St Gallen பல்கலைக்கழகம் பகுதி நேர வேலைகளில்ஈடுப்படும் பெண்கள், குறிப்பாக திருமணம் ஆன பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

சுமார்7,000 திருமணம் ஆன பெண்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

இதில்,முழு நேர வேலைகளுக்கு செல்லும்திருமணம் ஆன பெண்களை விட, பகுதி நேர வேலைகளில் ஈடுப்படும் பெண்கள் பல்வேறு உடல் நலன்சார்ந்த பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருவது தெரியவந்துள்ளது.

உதாரணத்திற்கு,பொதுவாக திருமணம் ஆன பெண்களுக்கு வீட்டில்உள்ள குழந்தைகள் மற்றும் வீட்டு பொறுப்புகளையும் கவனித்துக்கொள்வது அவசியமாகிறது.

இதுபோன்ற கடமைகளை செய்து முடித்துவிட்டு, பகுதிநேர வேலைக்கு செல்வதால், அவர்களுக்கு மன உளைச்சல், வேலைப்பளு,ஒருவித வெறுப்புணர்வு உள்ளிட்டவைகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால், அலுவலகங்களில் முழு நேர வேலையில் ஈடுப்படும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இவ்விதமான தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

திருமணம் ஆன பெண்கள் முழு நேரப்பணிகளில் ஈடுப்பட்டால், வீட்டு பொறுப்புகளை அவர்களது கணவன்மார்களும் கவனித்துக்கொள்வதால், பெண்கள் மீதுள்ள பாதிசுமை குறைகிறது.

ஆனால்,வீட்டிலும் வேலை பார்த்துவிட்டு அலுவலகத்திலும் வேலை பார்ப்பதால் பெண்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டும் 6 வயதான குழந்தை பெற்று30 சதவிகித தாய்மார்கள் 50 சதவிகித அளவிற்கு பகுதிநேர வேலையை தெரிவு செய்துபல்வேறு உடல் உபாதைகளை எதிர்க்கொண்டுவருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.