குறைகளை ஏற்றுக்கொண்டால் எளிதில் முன்னேறலாம்.

03-05-2016

தொழில் உலகில் ஊக்­கத்­தோடு செயல்­படும் பலர் இருக்­கி­றார்கள். எதற்­கெ­டுத்­தாலும் குற்றம் கண்­டு­பி­டித்­துக்­கொண்டு, சலித்­துக்­கொண்டு, சோர்­வாக ஏனோ­தா­னோ­வென வேலை­பார்ப்­ப­வர்­களும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள்.

நீங்கள் இதில் எந்தத் தரப்பை சேர்ந்­தவர் என்­பதைத் தீர்­மா­னிப்­பது எது? சுற்­றமும் சூழலும் வளர்ச்­சியை நிர்­ண­யிக்கும் உந்­து­சக்­தி­யாகப் பெரு­ம­ளவில் விளங்­கி­னாலும் நம்­மு­டைய மனோ­நி­லைக்கும் அணு­கு­ முறைக்கும் முக்­கிய இடம் உண்டு.


அதற்கு மிகச் சிறந்த உதா­ரணம், தேர் ­தலில் பல முறை தோல்­வியைத் தழு­விய ஒருவர் விடா­மு­யற்­சி­யோடு போட்­டி ­யிட்டு அமெ­ரிக்க அதி­ப­ராக வெற்­றி­வாகை சூடினார்.

தான் வளர்த்­தெ­டுத்த நிறு­வ­னத்­தி­லி­ருந்தே துரத்­தப்­பட்ட ஒரு வர் பின்­னாளில் பிர­பலக் கணினி ஜாம்­ப­வா­னாக மாறினார்.

அவர்கள் யார் யார் என்று தெரி­கி­றதா? இப்­படித் தன்­னைத்­தானே மெரு­கேற்­றிக்­கொள்­ளவும் தொழில்­ ரீ­தி­யாகச் சிறந்து விளங்­கவும் தேவை­யான 10 அணு­கு ­மு­றை­களை ஸ்பெயினில் இருக்கும் நவரா பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளரும் ஆலோ­ச­க­ரு­மான பாப்லோ மேல்லா பட்­டி­ய­லி­டு­கிறார்.

நிதர்­ச­னங்­களைப் புரிந்து கொள்தல்
உங்­க­ளையும் மற்­ற­வர்­க­ளையும் குறித்த நிதர்­ச­ன­மான பார்­வையும் புரி­தலும் வளர்த்துக் கொள்­ளும்­போ­துதான் சுய முன்­னேற்றம் சாத்­தி­ய­மாகும்.

அதிலும் நம்­முடன் இணைந்து பணி­யாற்­று­ப­வர்­க­ளிடம் எதிர்­பார்ப்பைக் குறைத்­துக்­கொள்­வது மிகவும் நல்­லது. நினைப்­ப­தெல்லாம் நடக்க வேண்டும் என எதிர்­பார்ப்­பதை விடுத்துச் சூழ்­நி­லையை யதார்த்­த­மாகப் புரிந்­து­கொண்டு கையாள்­வதே புத்­தி­சா­லி த்­தனம்.

பலமும் பல­வீ­னமும்
தப்­பித்­த­வ­றி­கூடத் தவறு நிகழ்ந்­து­விடக் கூடாது என நமக்கு நாமே கடி­வாளம் போட்­டுக்­கொள்­வதும் சிக்­கல்தான். நம்­மு­ டைய குறை­களை ஏற்­றுக்­கொள்ளப் பழக வேண்டும்.

பல­வீ­னங்­களை ஒத்­துக் ­கொண்டால் மட்­டுமே முன்­னேற்றம் சாத்­தியம். இல்­லையேல் தோல்­வியால் மனம் உடைந்­து­போகும். பல­வீ­னங்­களை ஏற்­றுக்­கொள்ளத் தயா­ரா­கா­த­வர்­க­ளுக்குத் தாழ்­வு­ம­னப்­பான்மை அதி­க­ரிக்கும். ஆக, வெற்­றியைக் கொண்­டா­டுவோம்; தோல்­வியை நிதா­ன­மாக ஏற்­றுக்­கொள்வோம்.

குற்றம் பார்க்­க­லாமா?
நீங்கள் சங்­கிலி துரித உண­வ­கங்­களைப் பல்­வேறு இடங்­களில் நடத்­து­பவர் எனக் கற்­பனை செய்­து­கொள்­ளுங்கள். திடீ­ரென ஒரு உண­வ­கத்­துக்கு வந்­தி­றங்­கிய இறைச்சி கெட்­டுப்­போ­ன­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

வாடிக்கை­யாளர் நலன் கருதி அந்த உணவை அப்­பு­றப்­ப­டுத்­தி­ய­போதும் இந்தச் செய்தி பர­வி ­வி­டு­கி­றது. இதில் உங்­க­ளு­டைய தவ­றென்று எதுவும் இல்லை. இந்தச் சூழலில் ஹோட்டல் நிறு­வ­ன­ராகப் பொறுப்­பேற்­றிரு க்கும் நீங்கள் நடந்­ததை எண்ணிச் சோர்ந்­து­போ­கலாம். 


யாரால் இது நடந்­ததோ அவரைக் கடிந்­து­கொண்டு தண்­டிக்­கலாம். ஆனால் இத னால் தீர்வு கிடைக்­கப்­போ­வ­தில்லை என்­பதைப் புரிந்­து­கொள்­ளுங்கள் சூழலைக் கட்­டுக்குள் கொண்­டு­வர நிதா­ன­மாகச் சிந்­தித்துச் செயற்­ப­டு­வ­துதான் நல்­லது.

மகிழ்ச்­சியும் நன்­றியும்
நெடுங்­கா­ல­மாகக் காத்­தி­ருந்த வாய்ப்பு கிடைக்­கும்­போது உட­ன­டி­யாக மகிழ்ச்சி அடைவோம். சில காலம் முழு­மூச்­சாக ஈடு­பாட்­டோடு செயற்­ப­டுவோம். ஆனால் காலப்­போக்கில் உத்­வேகம் குறைந்து அதன் அருமை மறந்­து­போகும். இந்த வேலை கிடைத்­தி­டாதா என ஏங்­கிய காலம் மாறி இது சரி இல்லை, அதில் குறை எனச் சலிப்­பூட்டும். இதனால் நம்­மு­டைய மனச்­சோர்­வுக்கு நாமே கார­ண­மா­கிறோம் என்­பதை மட்டும் நினைவில் வைத்­துக்­கொள்­வது மிகவும் அவ­சியம்.

நேர்­மறைச் சிந்­தனை
எதிர்­ம­றை­யான சிந்­தனை கொண்­ட­வர்­களைக் காட்­டிலும் நேர்­ம­றை­யான விற்­ப­னை­யா­ளர்­களால் 90 சத­வீதம் கூடு­த­லாகத் தங்கள் பொருட்­களை விற்க முடிந்­தது என்­கி­றது சமீ­பத்­திய ஆய்வு.

அது எப்­படிச் சாத்­தியம் எனக் கேட்­கலாம். உதா­ர­ண­மாக, நண்­பர்கள் சந்­திப்­புக்குச் செல்­லும்­போது எப்­ப­டியும் அந்தக் கூட்டம் அறு­வை­யா­கத்தான் இருக்கும் என்ற எண்­ணத்­தோடு சென்­றீர்­க­ளானால் நிச்­ச­ய­மாக உங்­களால் கொண்­டாட்ட மன­நி­லைக்கு எளிதில் வர முடி­யாது. அதே எளி­மை­யான உள­வி­யல்தான் இதன் அடிப்­ப­டையும்.

எட்­டக்­கூ­டிய இலக்கு
நம்மால் எட்ட முடிந்த இலக்கை நிர்­ண­யிக்­கும்­போது அதற்­கான உத்­வேகம் தானா­கவே பிறக்கும். ஒவ்­வொரு கட்­டத்­திலும் நீங்கள் அடைய வேண்­டிய உய­ரத்தின் யதார்த்­த­மான சாத்­தி­யக்­கூ­று­களைக் கணக்­கிட்டுத் திட்­ட­மி­டுங்கள்; வெல்­லுங்கள்!

அர்த்­த­முள்ள செயல்­பாடு
ஒருவர் அலு­வ­லக வேலைக்குச் செல்­வதும் மற்­றொ­ருவர் சமூகச் செயற்­பாட்­டா­ ள­ராக இயங்­கு­வதும் ஒன்­றா­கி­விட முடி­யாது. சில­ருக்கு மட்­டுமே வேலை என்­பது வாழ்க்­கையின் அர்த்­த­மா­கவே மாறிப் போகும்.  மற்­ற­வர்கள் அதைக் கண்­டு­பி­டி க்க வேண்டும்.

முன்­வர வேண்டும்
கொடுத்த வேலையை மட்­டுமே செய்­வ­தற்கும் முக்­கியத் தீர்­மா­னங்­களைத் தானே முன்­வந்து எடுப்­ப­தற்கும் மிகப் பெரிய வித்­தி­யாசம் இருக்­கி­றது. தலைமைப் பொறுப்பை ஏற்­றுக்­கொள்­ளும்­போது தானா­கவே உத்­வேகம் அதி­க­ரிக்கும்.

நம்­பிக்­கையும் கட­மையும்
நமக்குப் பிடித்­ததை மட்­டுமே செய்­து­விட்­டாலே உற்­சாகம் பீறிட்டு எழும் எனச் சொல்­லி­விட முடி­யாது. பிடித்த விஷ­ய த்தை முழு ஈடு­பாட்­டோடு செய்­யும்­போது மட்­டுமே அது சாத்­தியம். ஈடு­பாடு தளர்ந்­து­போகும் வேளையில் உங்­க­ளு­டைய கட­மை­களை அசைபோடுங்கள் அது உங்களை வழிநடத்தும்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
தடைகளை எதிர்கொள்ளும் போது தளர்ந்து போவது சகஜம்தான். ஆனால் விழும் போது நம்மை நாமே எழுப்பிக் கொள்ளும் மனோதைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் போட்ட புதிரு க்கு விடை இதோ. விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திரு க்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க முடியாது.