கோவிலுக்குச் சென்று வந்தவுடன் கால் கழுவக்கூடாது ஏன் தெரியுமா...?

May 29, 2016


கோவிலுக்குச் சென்று வந்தவுடன் கால் கழுவக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

கோவில் என்பது கடவுள் இருக்கும் இடம். நமது பக்தியைச் செலுத்தக் கோவிலுக்குச் செல்கிறோம். இந்த உலகத்தில் பரிசுத்தமான ஓர் இடம் என்றால் அது அன்றும் இன்றும் கோவில்தான்!

அந்த இடத்துக்குப் போய் அவரை தரிசனம் செய்து திரும்பும்போது கால் கழுவக் கூடாது.

கோவில் சென்று வந்த பின் நம் உடல் மனம் முழுவதும் சுத்தம் ஆன பிறகு, காலை மட்டும் ஏன் தனியே சுத்தம் செய்ய வேண்டும்.

எங்கேயெல்லாம் கால் கழுவ வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கேயெல்லாம் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

பகவானின் தரிசனம் முடித்து வரும்போது நம் உடலில் எந்த அசுத்தமும் இருப்பதில்லை என்பதால், எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சுத்தப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை.

தேர் இழுக்கிறோம். அங்கே ஒரு வித்தியாசமும் இல்லை. அங்கே ஒருவருக்கு ஏதோ தீட்டு இருக்கிறது என்றால் கவலையே இல்லை. தேர் வடத்தைத் தொட்ட உடனேயே எல்லாத் தீட்டும் போய் விடுகிறது.

கோயிலில் இருந்து திரும்பும்போது மழை வந்துவிட்டது. சேற்றில் கால் வைத்துவிட்டீர்கள் என்றால் அப்போது கால் கழுவலாம்.