கேர்ள் பிரண்ட்டை கைவிடுவதற்கான சில காரணங்கள் : வாங்க பார்கலாம்...!

June 14, 2016


நாம் காதலித்து அன்பு வைத்திருந்த ஒருவரின் மேல், அந்த அன்பைத் தொடர முடியாத தருணம் ஒன்றும் நம் வாழ்க்கையில் வரும்.

இந்த நேரத்தில் அந்த உறவை முறித்துக் கொள்ள வேண்டிய கடினமான முடிவை நாம் எடுக்க வேண்டியிருக்கும். உணர்வுபூர்வமாக என்று வரும் போது, உறவை முறித்துக் கொள்வதென்பது எளிய விஷயமல்ல.

அது வலியையும், மனரீதியான பாதிப்புகளையும் தரும் மற்றும் செய்வதற்கு மிகவும் கடினமான விஷயமாகவும் இருக்கும்.

சில பேர், சூழ்நிலை மிகவும் மோசமான நிலையை அடையும் வரையிலும் காத்திருக்கும் வகையில் தள்ளிப் போடவும் செய்வார்கள். வேறு சிலர், திடீரென இந்த வெடிகுண்டை வீசி, தாங்கள் அன்பு வைத்திருந்த பெண்ணின் இதயத்தை வெடிக்கச் செய்வார்கள்.

எனினும், அன்புடனும், புத்திசாலித்தனமாகவும் மற்றும் உங்கள் காதலியை காயப்படுத்தாத வகையிலும், உங்களுடைய உறவை முறித்துக் கொள்ள நீங்கள் சற்றே முறையாக திட்டமிட வேண்டும்.

இந்த சூழ்நிலையை இராஜதந்திரத்துடன் கையாண்டு, நண்பர்களாக பிரிந்து செல்லும் வகையில் செய்வது நல்லது. காதலியை தூக்கி எறிவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இந்த ஒரு விஷயத்திற்காக ஏராளமானவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்லவும் பறந்து வருவார்கள்.

உங்களுடைய நண்பர்களிடம் இந்த பிரச்சனையைப் பற்றி விவாதிக்க விரும்பினால், இந்த இடத்தில் உங்களுக்கான சிறந்த அறிவுரை சற்றே காலம் எடுத்துக் கொள்ளுங்கள் என்பது தான். இங்கே, உங்கள் கேர்ள் பிரண்ட்டை உதறுவதற்கான சில காரணங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஓ! இவள் அதிகமான கோரிக்கை வைப்பவள்
உங்கள் கேர்ள் பிரண்ட் அதிகமான கோரிக்கை வைப்பவளாக இருந்தால் சற்றே எச்சரிக்கையுடன் இருங்கள்!! அது உங்களுக்கு பிரச்சனைகளை வரவழைக்கும். அவள் உங்களுடைய வழியிலிருந்து விலகிச் செல்ல விரும்பினால், இது அவளுக்கு நினைவுக் குறிப்பு வழங்க ஏற்ற நேரம் என்று கருதவும்.

மேலும், இது உங்கள் வாழ்வில் வேறு ஒரு புதிய பெண்ணிற்கான நேரமாகவும் இருக்கும். இதுவும் உறவுகளுக்கான அறிவுரைகளில் ஒன்று தான்! இதனை நன்றாக குறித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அவளை கையும் களவுமாக பிடித்தால்!
இது ஒரே பெண் பலருடன் பழகி வரும் காலம், எனவே அது போல் அவள் வேறொருவருடனும் பழகுவது தெரிய வந்தால், நீங்கள் விலகி விடலாம். உங்களுடைய உறவு முறிவதற்கு காரணம் தேவைப்படும் போது, இந்த காரணம் சிறப்பாக வேலை செய்யும். இந்த காரணத்திற்காக உங்களுடைய கேர்ள் பிரண்ட்டை நீங்கள் உதறி விடலாம்.

உணர்ச்சிக்கு அடிமையானவரா?
இது உங்கள் காதலியை உதறித் தள்ள மிகவும் ஏற்ற காரணங்களில் ஒன்றாகும். உங்கள் காதலி உங்களை மிகவும் ஆழமாக காதலிக்கிறாள் என்பதை நீங்கள் மிகவும் அனுவித்திருப்பீர்கள். எனினும், இதிலும் சற்றே எச்சரிக்கையுடன் இருக்கவும்! இந்த விஷயம் எதிர்மறையாக போகவும் வாய்ப்புகள் உள்ளன.

அவள் உங்கள் மேல் கொண்டிருக்கும் காதல், சில நேரங்களில் அளவுக்கு மீறிய சுமையாகவும் மாறலாம். இந்த இடத்தில் உங்களுக்கு, சிறந்த உறவுக்கான அறிவுரையாக இருப்பது, உங்கள் கேர்ள் பிரண்ட், பொறாமையுடையவளாக இருந்தால், எச்சரிக்கை தேவை! என்பது தான்.

எப்பொழுதுமே ‘முடியாது’ என்று சொல்லி வந்தால்…
உடல் ரீதியான நெருக்கமும், மகிழ்ச்சியும் காதலின் ஒரு பகுதி தான்.

எனினும், உங்களுடைய காதலி உங்களுடைய ஆண்மையின் மீதான ஈர்ப்பை சிறிதேனும் காட்டாமல் நெடுங்காலமாக இருந்தால், இது ஒரு கவனிக்க வேண்டிய அம்சமாகும். நீங்கள் அணுகும் போதெல்லாம் அவள் ‘முடியாது’ என்று சொல்லுவாள்.

இந்த காரணத்திற்காகவும் அவளை உதறி விடலாம்.
புகார் புத்தகம்

உங்களுடைய காதலி எப்பொழுதும் நீங்கள் செய்வதைப் பற்றியும், செல்லும் இடங்களைப் பற்றியும், உங்களைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருந்தால், அவளை உதறி விட இதை விட வேறெந்த காரணமும் தேவையில்லை.

அவள் உங்களுடைய தினசரி பழக்கங்களைக் கூட விட்டு வைக்காமல் குறை கூறிக் கொண்டிருந்தால், அவளை அவள் வழியில் செல்ல விட்டு விடுங்கள்.
அவமானப்படுத்தும் போது…

குடிப்பதும், நட்புடன் பழகுவதும் பொதுவான விஷயங்களாகி வருகின்றன. எனினும், அவள் குடித்து விட்டு, சரியில்லாத இடங்களில் நடனமாடி உங்களை அவமானப்படுத்தும் போது, நீங்கள் அவளை கண்டிப்பாக உதறி விடலாம்.
உணர்வுகளற்ற உறவுகள்!!!

அவள் உங்களை விரும்பவில்லை மற்றும் அந்த சிறப்பான காதல் உணர்வு அவளிடம் இல்லை என்ற அதிர்ச்சியை நீங்கள் பெறும் போது, அந்த உறவு தேவையில்லை. எந்தவொரு உறவிலும் இது போன்ற கடினமான நேரங்கள் வருவதும், காதல் வறண்டு போவதும் நடக்கக் கூடியது தான்.

இது போன்ற காலம் தான் உங்களுடைய உறவில் நிகழ்ந்து கொண்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், இதற்கான சிறந்த அறிவுரை – ‘அந்த உறவை நீங்கள் உதறி விட வேண்டும்’ என்பது தான்.