காதல் வேஷம் : சவுதி நாட்டிலிருந்து அம்மாவனுப்பும் றியால்

March 14,2016

காதல் வேஷம்

 

சவுதி நாட்டிலிருந்து

அம்மாவனுப்பும் றியால்

ஆடையணியப் போதும்

டுபாய் நாட்டிலிருந்து

அக்கா அனுப்பும் செக்

சினிமா பார்க்கப் போதும்

குவைட் நாட்டிலிருந்து

தங்கை அனுப்பும் டினார்

தண்ணி (மது) அடிக்கப் போதும்

மேலதிக செலவுகளுக்கு

முதல் அனுப்பி வைக்க

வெளிநாட்டில் வேறு யாருமில்லை

அதற்காகத்தான் - நான்

இப்போது இவளை

காதலித்து வருகின்றேன்

 

நியாயவாதி.