நானும் மரமும் : இயற்கையின் நியதிபடி இலையுதிர் காலத்தின்

March 16, 2016

நானும் மரமும் : 

இயற்கையின் நியதிபடி

இலையுதிர் காலத்தின்

கட்டளைக்கு இணங்கி - தன்

கோலத்தை மாற்றிக்கொண்ட

மரமும்

 

காலத்தின் கோலத்தால்

விதியின் சதியில் விழுந்து

தலையெழுத்தை தொலைத்த

நானும் ஒன்றுதான்

 

மீண்டும் வாழ்வின் வசந்தம்

வரும் என்ற நம்பிக்கையில்

நானும் மரமும்

 

பெ.ரிஸாதா
வரக்காபொலை.