பூத்தோட்டம் நீ எனக்கு! : முல்லையாய் சிரிக்கிறாய் மல்லிகையாய் மணக்கிறாய்

March 27, 2016

பூத்தோட்டம் நீ எனக்கு!

 

முல்லையாய் சிரிக்கிறாய்

மல்லிகையாய் மணக்கிறாய்

செம்பருத்தியாய் சிவக்கிறாய்

ரோஜாவாய் ஜொலிக்கிறாய்!

 

தாமரையாய் மலர்கிறாய்

அல்லியாய் துவழ்கிறாய்

வாடா மல்லியாய் நிமிர்கிறாய்

கனகாம்பரமாய் சிலிர்க்கிறாய்!
 

கொத்தாய் பூத்துக் குலுங்குகிறாய்

கொடியாய் படர ஏங்குகிறாய்

கொழுகொம்பாய் நானிருக்க

பற்றி கொள்ள ஏன் தயங்குகிறாய்!

 

திருமதி. மியூரியல்
மட்டக்களப்பு