கள்ளச்சி : எனக்கும் என் தைரியத்துக்குமான நீண்ட போராட்டத்துக்கு பின் தைரியம் என்னை வெற்றி பெற்று

March 28, 2016


கள்ளச்சி

எனக்கும் என் தைரியத்துக்குமான

நீண்ட போராட்டத்துக்கு பின்

தைரியம் என்னை வெற்றி பெற்று

உன்னிடம் என் காதலை

சொல்லிவிட்டது

இதய துடிப்பு வேகமாக

உடல் வியர்த்து

உச்சந்தலை சூடேறியது

அப்போதே நினைத்தேன்

இது கனவுதான் என்று

நேரில் சொல்லும் அளவுக்கு

தைரியம் எனக்கிருந்து விட்டாலும்

ஹூக்கும்...

மேலும் ஒரு நிமிடம் கூட

தாமதிக்கவில்லை

உடனே கனவை கலைத்து

கண்களை திறந்தேன்

திறந்திருந்த வாசல் கதவு வழியே

வீட்டு முற்றத்தில்

ரொம்ப நாளாய் பூக்காமல்

இருந்த செவ்வரத்தம் செடி

மொட்டு விரித்திருந்தது

கள்ளச்சி

 

மெல்போர்னில் இருந்து
ப.கனகேஸ்வரன்
பொகவந்தலாவை.