அழகியே! : வட்டமான உன் முகத்தில் வட்ட நிலவும் தோற்றுவிடும்

March 29, 2016

அழகியே!

வட்டமான உன் முகத்தில்

வட்ட நிலவும் தோற்றுவிடும்

வெண்மையான உன் முகம் கண்டு

வெண்ணிலவும் வியந்து நிற்கும்

 

கண்ணாடி ஏன் போட்டாய்

உன் கண்ணழகை மறைப்பதற்கா?

நீ கண்ணாடி போட்டு வந்து

என் முன்னாடி நிற்கையில்

உணர்வுகளை இழக்கிறேன்

உன்னழகை வியக்கிறேன்

 

உலகமே வியக்கும்

உலக அழகி நீயடி

உன்னழகில் விழுந்த

முதல் அடிமை நானடி...