இதுதான் காதலா....?

April 21, 2016


கல்லறையில் கல்மீன் கண்ணீர் காதல்
அனார்கலி தான் காவிய காதல்....
கயிற்றிலே தொங்குது எம்மவர் காதல்....
அன்பில்லா பிரிவால் வந்தது சாதல்....

மும்தாஜ் சாஜகானின் தாஹ்மஹால் காதல்
முன்னோர்கள் போற்றிய தெய்வீக காதல்
முச்சந்தியில் சிரிக்குது எம்மவர் காதல்
பிள்ளை ஒன்று பிறந்ததும் வந்தது சாதல்....

கோவலனும் கண்ணகியும் கொண்டது காதல் 
சலங்கையொலியில் சிதறிய சங்கீத காதல் 
கோபம் கொண்டு பிரியுது எம்மவர் காதல்
விவாகரத்து வந்ததும் ஒருவர் சாதல்.....

ரோமியோ ஜூலியற் ரோமாபுரி காதல்
அவனியில் வந்த அதிசய காதல்
இப்படி அரங்கேருமா எம்மவர் காதல்...
இரு கை கோர்த்து ஆற்றினில் பாயுது எம்மவர் சாதல்.

நளன் தமயந்தியின் பன்னீர் காதல்...
நன்றாய் இனித்திடும் தேன்மொழி காதல்.
நஞ்சுண்டு சாகுது எம்மவர் காதல்
நன்றாய் இனிக்க வேண்டும் எம்மவர் காதல்

தோப்பு மர பூஞ்சோலைகள் காதலல்ல....
கண்டவுடன் கண்ணடிப்பது காதலல்ல....
தேகசுகம் தேனிலவும் காதலல்ல...
சாகும் வரை இணைந்து வாழும் "தெய்வீக காதல்"