உனக்கு மட்டுமே : என் இதய தேவதையே உன் உதயம் காண தினம் மதியம் வரை

May 22, 2016என் இதய தேவதையே

உன் உதயம் காண

தினம் மதியம் வரை

தாமதிக்கிறேன்

 

என் பிரியமானவளே உன்

பின்னி நடக்கின்ற நடையில்

உன் பின்னலின் சதிராட்டம்

காண பிற்பகல் வரையும்

பித்தனாகிறேன்

 

என் உயிரினும் மேலானவளே

உன்னை உரிமையோடு

என் உடமையாக்கி விட

உற்றவர்களை உதறித்

தள்ளிவிட்டு உனக்காய்

தவம் கிடக்கிறேன்

 

என் கண்ணின் மணி போன்றவளே

என் கருத்திற்கினியவளே

உனக்காக மட்டுமே நான்

மற்றவர்களோடு ஒப்பிடாதே

உன்னதமான எனது அன்பு

அதை நீ உறுதியாக நம்பு