எனது அம்மா : அவளின் வாழ்க்கை முழுவதும் எனக்காக அற்பணித்தவள் முந்நூறு நாட்கள் என்னைத் தாங்கி

January 06,2016

 

 

அவளின் வாழ்க்கை முழுவதும்

எனக்காக அற்பணித்தவள்

முந்நூறு நாட்கள் என்னைத் தாங்கி

கண் விளிக்க வைத்தவள்

 

இறுதியிலே நான் வெளிவரும் முன்

வலியை மட்டும் அடைந்தவள்

 

அவள் ரத்தத்தை பாலாக மாற்றி

எனக்கு உணவாக கொடுத்தவள்

 

நான் நடக்க ஆசைப்படும் போது

என்னுடன் சேர்ந்து நடந்தவள்

 

நான்  வலியால் துடிக்கும் போது

என்னை விட அதிகம் துடிப்பவள்

 

என்னை தூங்க வைக்க இரவு முழுவதும்

தூங்காமல் இருப்பவள்

 

நான் சிரிக்கும் போது என்னுடன் சேர்ந்து

சிரிப்பவள்

 

கஸ்டம் தெரியாமல்  என்னை வளர்த்தவள்

யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுக்காதவள்

 

என்னை மட்டும் பெரிதாக நினைத்தவள்

அவள்தான் என் அம்மா!

 

ஐ.எல்.சர்ஜூன்,

நற்பிட்டிமுனை.