அம்மாவை பின்பற்றுங்கள்...! அமைதியாய் கடல் போலே அம்மா இருக்கின்றாள் ஆரும் சீண்டினால் சுனாமியாய் மாறிடுவார்...

January 07, 2016

அம்மாவை பின்பற்றுங்கள்...!

 

அமைதியாய் கடல் போலே அம்மா இருக்கின்றாள்

ஆரும் சீண்டினால் சுனாமியாய் மாறிடுவார்

தென்றல் காற்றெனவே  உடல் வருடிச் சென்றிடுவாள்

தப்பாக வருடுவோர்க்கு புயலாக மாறிடுவாள்

அன்பாக வாழ்வாளே அன்னை திரேசாதான்

அடக்கு முறை செய்தாள் இடியமீனின் அம்மாதான்

பொறுமையில் பூமியை மிஞ்சியே நின்றிடுவாள்

பொல்லாங்கு செய்தாலோ பூகம்பமாகிடுவாள்

நடந்து சென்றால் புல்லின் நுனி கூட சாகாது

நாச வேலை செய்தால் யார் உயிரும் தப்பாது

பெண்களே அம்மாவைப் பின்பற்றி வாழுங்கள்

கண்ணான உன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

 

 

க. நடராஜா,
யாழ்ப்பாணம்.