நீயே என் உயிரம்மா! : பத்து மாதம் கருவில் பக்குவமாய் எனை சுமந்து பாலூட்டி சீராட்டி கண்மணி போல்

January 20, 2016

 

பத்து மாதம் கருவில் பக்குவமாய்

எனை சுமந்து

பாலூட்டி சீராட்டி கண்மணி போல்

எனை காத்தவள் என் அம்மா

 

என்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தி பல திறமைகளை அளித்தவளே

கவலையின் போது ஆறுதலாகவும்

என் தேவைகளை நிறைவேற்றுபவளே

என் பொக்கிஷமே உனை என்றும்

நான் மறவேன் உனக்கு நான்

எதை கொடுத்தாலும் மிகையாகாது

அம்மாவே உன் அன்பிற்கு ஈடே

இல்லை

நீங்கள் எனக்காக பட்ட கஸ்ரங்களை

நான் மறவேன்

தாயே நீ பல்லாண்டு வாழ இறைவனை

வேண்டுகிறேன் எனக்கு மீண்டும்

ஒரு பிறவி இருந்தால் உங்களுக்கே

மகளாக பிறக்க வேண்டும்

நீ தான் என் உயிர் அம்மா..

 

அனிதா,

மீசாலை.