அன்னை : உனக்கு நோய் வந்தால் - நீ உன் அன்னையிடமே செல் அன்னை பராமரிப்பது போல்

January 22, 2016

அன்னை

 

உனக்கு நோய் வந்தால் - நீ

உன் அன்னையிடமே செல்

அன்னை பராமரிப்பது போல்

உன்னை எவரும்

பராமரிக்க மாட்டார்

 

அன்னையைத்தவிர எவரும்

உன்னிடம் கைம்மாறு எதிர்பார்ப்பார்

எண்ணிலா இடும்பைகளும் - நீ

பண்ணிய இடுக்கண்களும்

அன்னையின் முன்

தூசுக்கு ஒப்பாகும்

 

அன்னை உன் குற்றங் கருதாள்

பென்னம் பெரு பிழையையும் என்னாள்

அவள் பாதத்தடி சொர்க்கமென்றால்

அன்னை மிஞ்சிய இன்பமெதுவோ ?

 

S.M.M. தஹலான்
பட்டுகொடை