அம்மாவே உலகம்! கருவிலே நான் உருவாக காரணமாகின்றாள்

February 11, 2016

அம்மாவே உலகம்!

கருவிலே நான் உருவாக

காரணமாகின்றாள்

கண்கள் காணா வீட்டில் என்னை

காவல் காக்கின்றாள்

முன்நூறு நாட்கள் முடிய

வீட்டைத் திறக்கின்றாள்

இதுதான் உலகம் எனக் காட்டி

மனம் பூரிப்படைகின்றாள்

நானோ வீறிட்டழவே அவளோ

மகிழ்ந்து சிரிக்கின்றாள்

அதுதான் எனது பிறந்த நாளென்று

அணைத்துக் கொள்கின்றாள்

தாகம் தீர்க்க தனது உதிரம்

பாலாய்த் தருகின்றாள்

பாசம் என்ற வார்த்தையை

கருங் கல்லில் எழுதுகின்றாள்

பாரில் நீதான் உலகம் என்றென்

 காதில் சொல்கின்றாள்

மறுத்த நானோ அம்மா

நீதான் உலகம் என்கின்றேன்துணவியூர் நடா.