என் தாயே! : இனியவளே... உன் கருவறைதான் என் வாழ்விடம் என்றிருந்தால்.......

February 19, 2016என் தாயே!

இனியவளே...

உன் கருவறைதான் என் வாழ்விடம் என்றிருந்தால்.......

இன்னும் வாழ ஆசை கொண்டிருப்பேன்.....

உன் பாதுகாப்புக்கு எல்லை இல்லை என்றிருந்தால்......

இவ்வுலகை பற்றி அச்சம் கொண்டிருக்க மாட்டேன்.......

என் உறவே நீ இருந்தால்...........

உன் உறவுகள் தரும் வேதனை தாங்கி இருப்பேன்........

என் உயிரே நீ இவ்வுலகில் என்னை தனிமை படுத்துவாய் என்று அறிந்திருந்தால்..........

நான் பிறந்திருக்க மாட்டேன்........

உன் அரவணைப்பு முழுமை இல்லை என்று  உணர்ந்திருந்தால்.........

தனிமைக்கு முகம் கொடுக்க பழகி இருப்பேன்.......

அன்பானவளே.....!

என் இறுதி மூச்சு வரை உன் நினைவுகளை இழந்திருக்க மாட்டேன்

என் தாயே?

 

 உன் மகள்
எம்.ஏ. காலிதா