அன்பானவள் : தொப்புள் கொடியோடு உறவுக் கொடியையும்

March 25, 2016

 

அன்பானவள்

தொப்புள் கொடியோடு

உறவுக் கொடியையும்

உருவாக்கிய என் அன்னையே!

உன் கருவறையில்

சுமையாய் நானிருந்ததை

சுகமாய் அனுபவித்தவளே!

உன் அன்பிற்கும்

உண்டோ நிகர்!

நான் வெளியுலகத்தை

தரிசித்த போது

நீ ஆனந்த மழையில்

நனைந்ததை நான்

அறிவேன் தாயே!

என் அழுகைச் சத்தம்

கேட்டால் அரவணைப்பதில்

உன்னைப்போல்

யாருள்ளனர் தாயே!

நோய் வந்தால்

சில நொடியேனும்

விழி மூடாமல்

பணி விடை செய்வதற்கு

உன்னைப்போல்

யாருள்ளனர் தாயே!

தூளிகட்டி தாலாட்டுப்பாடி

தூங்க வைக்க

உனக்கும் நிகர் உண்டோ தாயே!

உண்மையில் தாய்மையில்தான்

எத்தனை அழகு இருக்கின்றது

என்பதை நான் அறிந்தது

உன்னால் தான் தாயே!றிஸ்னா றஸீன்
இக்கிரிக்கொள்ளாவ.