என்ன கைமாறு செய்ய போகின்றேனோ ?

July 30, 2015நீ எனக்கு செய்த தொண்டுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என் அன்னையே!

பத்து திங்கள் என்னை சுமந்து பெற்றெடுத்தவளே!  

எனது ஆரம்ப பாசறை நீதான். உனது பாசறையில் நான் கற்ற பாடங்கள் பல.
உனது பாசறையில் பத்து மாதங்கள் பயிற்சி  பெற்றதன் பின் ஒரு பாலகனாய் பார் வந்தேன்.

நான் பசி என்று அழுகின்ற வேளையெல்லாம் நீ உனது ஊன் உறக்கத்தை மறந்து உனது உதிரத்தினை பாலாக்கி ஊட்டிக்கொண்டிருந்தாய்.
நான் எனது பசியாறி மகிழ்கின்றபோது நீ உனது பசி மறந்து மகிழ்ச்சியடைந்தாய்.

உனது கருவறையில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தினையும் இந்த உலகிற்கும் விளங்க வைப்பதற்காக பல இன்னல்களையும் துன்பங்களையும் நீ சுமந்து இந்த பாரினில் ஒரு உயர் அந்தஸ்தினில் கொண்டு போய் சேர்த்தாய்.

இவை அனைத்திற்கும் என்ன கைமாறு நான் உனக்கு செய்ய போகின்றேனோ ? என் உயிர் உள்ள வரை உன்னை  பார்த்துக்கொண்டே வாழ வேண்டும் அன்னையே!
 

ஆக்கம்
றிஸான் மஜீத் 
கல்முனைக்குடி