தாயே எல்லாம் நீயே !

September 07, 2015

 

 

பத்துத் திங்கள்

பத்தியம் காத்து

பக்குவமாக

பெற்றெடுத்து என்னை

 பாரிற்கு பரிசளித்தவள்

என் தாயே!

 

உதிரத்தை

பாலாக்கித் தந்து

உணவோடு

பாசத்தையும் ஊட்டி

உலகினில் நானும்

வாழ்ந்திடவே

உயிரளித்த தெய்வம்

நீதான் தாயே!

 

அகரம் தொட்டு

அரிச்சுவடியை ஊட்டி

அகரவரிசை

சொல்லித்தந்த

ஆரம்பப் பள்ளிக்கூடம்

நீதான் தாயே!

 

உன் மடியை எனக்கு

தலையனையாக்கி

உன் தாலாட்டுக்கு என்னை

ரசீகனாக்கியவன்

நீதான் தாயே!

 

விலையாய் பணத்தை

வாரி வீசினாலும் நீ

பொழியும்

பாச மழை

விற்பனையில்

கிடைக்காது தாயே....

 

தாயாய் நீயும்

இல்லையென்றால்

சேயாய் நானும்

உதித்திருப்பேனா?

இவ்வுலகில் தாயே...

 

இக்காசினியில்

என்னை

உதிக்க வைத்து

உயிரளித்த தெய்வமாம்

என் தாயே...

எனக்கு எல்லாம் நீயே...

 

மொஹமட் முஸ்னி முனீர்
இப்பாகமுவ