என் அன்னை

September 15, 2015
இறைவா நான் செய்த தீமை என்னே

நான் நேசிக்கும் சொந்தம்

என் அன்னை

நான் சுவாசிக்கும் இறுதி மூச்சும்

என் அன்னை

 

எத்தனை எத்தனை

உணர்வுகள்

எத்தனை எத்தனை ஆசைகள்

அத்தனையும் மனக்கோட்டையாய்

சிதறியே மாயமென்னே

எனக்குள் ஒளி விளக்காய் இருந்த தீபம்

அணைந்த சோகத்தால்

இருட்டறையில் தவிக்கின்றேன்

இறைவா நான் செய்த தீமை என்னே ?

 

S. வள்ளியம்மை ஜெயசங்கர்
மொண்டிகிறிஸ்டோ