தாய்மை

October 14, 2015அம்மா கருவறையில் நான் உதித்தது முதல் நீ பட்ட துயரங்கள் சொல்லி மாளாதவை.

தலைவலி, கால் வீக்கம் ஒருபக்கம் தொல்லை தர மறுபக்கம் மருந்துகள், ஊசிகள் என்று அவதியுற்றாய்.

உற்றார், உறவுகள் மணக்க மணக்க சமைத்து வந்தும் உண்பதற்கு உன் தலை சுற்றும் வாந்தியும் விடவில்லை.

கேட்பதையெல்லாம் தந்தை கொண்டு வந்து கொட்டிய போதும் ஆசையாய் எடுத்து ருசிக்க முடியவில்லை.

பத்து மாதமும் படாத பாடு பட்டாலும் என்னை தொட்டு மகிழ்ந்து உன் துயர் மறந்தாய். எத்தனை தொல்லைகள் வந்த போதும் அம்மா நீ என்னை தொல்லையென்று நினையாது வழிகளை தாங்கிக் கொண்டு பாரினிலே என்னைப்படைத்த தெய்வம் நீ!

உன் போன்ற மகத்தான அன்பு செலுத்த இதுவரை எந்த இரத்த உறவும் பூமியில் உதிக்கவில்லை.

 

 

குருநாகல்