அன்பு அம்மா...

October 19, 2015

 

 

நான் பயின்ற முதல் பள்ளிக்கூடம் உன் கருவறை 

நான் கேட்ட முதல் இசை உன் இதயத்துடிப்பு

நான் கேட்ட முதல் பாடல் தாலாட்டு

நான் பேசிய முதல் வார்த்தை அம்மா

நான் பார்த்த முதல் உன்னத தெய்வம் நீ

நான் மகிழ்ந்த முதல் ஸ்பரிசம் உன் முத்தம்

அம்மா என்னை ஈரேழு மாதங்கள் சுமந்து

பாலூட்டி சீராட்டி தவறுகள் செய்யும்

போது பொறுமையாய் என்னை நல்வழி

நடத்தி மழலை என் மொழி கேட்ட

உடன் ஓடோடி வந்து கண்ணை

இமைபோல் என்னை அனுதினம்

காத்த உனக்கு எத்தனை எத்தனை

தெய்வங்கள் வந்தாலும்

ஈடாகுமோ அம்மா....!

 

S. பிரதீபன் லதீஷன்
குருநாகல்