அன்னையை ஆராதிப்பேன்

October 24, 2015

 

 

என்னை பத்து மாதம் கருவில் சுமந்து

பல மாதங்களாய் தோளில் சுமந்த

அன்னையே!

உன்னையும் நீ பாராமல்

உன் உயிர் கொண்டு என்னை

உருவாக்கியவளே!

கோடி பூக்களை உன் காலடியில் கொட்டி

நான் ஆராதித்தாலும்

உன் தியாகத்துக்கு ஈடாகாது அன்னையே!

உன் பிறந்த நாளில் மட்டும் இன்றி

என் ஜீவ நாட்கள் அனைத்தும்

உன் காலடியில் கிடந்து உன்னை

ஆராதிப்பேனாக!

 

விகாஷ் ரகுநாத்
(கொழும்பு - 15)