அன்பின் உறைவிடம்

November 20, 2015

 

 

கரிசனாய் கருவிலே சுமந்து எனைப் பெற்று

உதிரத்தை உணவாக்கி என் உடலுக்கு

உரமிட்டு கண்விழித்து - கண்ணயற

முத்தமிட்டு தாலாட்டு பாடியவர்!

 

அணைப்பிலே ஒரு கணம் ஆறாத் துயராற்றி - என்

விழி நீர்த்துடைத்து வெற்றிக்கு வித்திட்டு

மனதுருகி என் உலகமே நீ தானடா என்றவள்

எனை விட்டு உயிர் துறந்தாள்

 

எங்கு பார்த்தாலும் அன்னையின் நினைவலைகள்

நிழல் நிஜமாகாதா மண்டியிட்டு கதறுகிறேன்

எப்படி மறப்பேன் தியாக தீபத்தின் அர்ப்பணிப்பை

ஆயிரமாயிரம் ஜென்மங்கள் வந்து போயினும்

அழியாத அன்பின் உறைவிடம் அன்னை மடியே

 

கு. சாந்திமா கெபிரியல்,
வவுனியா.