தாயே உன்னை தாலாட்டுகிறேன்

December 08, 2015

 

 

தூய அன்பை தூவியதென்ன

தோள் தாவிய என்னை நீவியதென்ன

 

உயிர்மெய்யை ஊட்டியதென்ன

என்னை உயிர்மையால் தீட்டியதென்ன

 

இராத்தூக்கம் தள்ளியதென்ன

உன்விழி சிராய்ப்பும் சிரிப்பை சொல்லியதென்ன

 

யாரோ எவரோ இனியாரோ

என் தாயைப் போல இனிப்பாரோ

 

ஒளிரும் விளக்கே நீ குளிர்ந்ததென்ன

எந்தன்

புலரும் கிழக்காய் நீ மலர்ந்ததென்ன

 

நாளும் மெழுகாய் போனதென்ன

நீ - நான் வாழும் உலகாய் ஆனதென்ன

ஒழுகும் கூரைக்குள் குடையானதென்ன

உன்னில் பெருகும் அன்புக்கு நான் என்ன பண்ண

 

யாரோ எவரோ சொல்வாரோ

என் தாயை தாண்டி வெல்வாரோ

 

மனால்
போருதொட்ட