உயிரருவி : அடுப்பெரிக்கும் புகையில் தெரிகின்றது அம்மாவின் மனவேதனை..!

December 09, 2015

 

 

 

 

அடுப்பெரிக்கும்

புகையில் தெரிகின்றது

அம்மாவின் மனவேதனை!

 

தென்றலின்

உறவு முடிச்சில்

தென்றலுக்கு செவிலித்தாயோ?

குருட்டுக் கண்ணிலும்

கொட்டுகின்றது தாயின் வலியை!

 

மகனின்

வைராக்கிய நெஞ்சை

கசிய விடாத பலநூறு

சம்பாசனைகளையும் தாண்டி

கண்களில் சொரிய வைக்கும்

அடுப்புப் புகையின்

அர்த்தம் வேறு என்றாலும்

கண்ணீர் தான் சுரக்கின்றது!

 

 

எதிர்கால கனவுகள்

விறகுக்கட்டை போல்

எரிந்து எரிந்து

சாம்பலாய் போனதே

எதுவும் ஈடேற்றமின்றி!

 

மகளின்

சிந்தனை உலையில்

பல தூவாரங்கள்

நினைக்கும் போதே

நழுவிக் கொள்ள

இந்த

பிள்ளை வேர்கள்

எங்கு நீரைப் பெற்று

துளிர் விட்டார்கள்

இன்று காய்த்து விட்டார்

நாளை உதிர்வார்

நியதியின் கதவை

யாரால் மூடமுடியும்!

 

நெருப்பு

பூமி பார்த்து எழுந்ததில்லை

அம்மாவின் அன்பு போல்!

காற்று தனிமையில்

கடந்ததில்லை

தாயின் கனவுபோல்!

 

ஜெ.ஈழநிலவன்,
திருமலை.