அம்மா...! அம்மா...! : ஆண்மை கொண்ட என்னை அடி வயிற்றிலே சுமந்தாள் பத்து மாதம் படாத பாடு பட்டாள்...

December 11, 2015

 

 

ஆண்மை கொண்ட என்னை

அடி வயிற்றிலே சுமந்தாள்

பத்து மாதம் படாத பாடு பட்டாள்

பெற்றெடுத்து பெரியவனாய் வளர்ப்பதற்கு

நெஞ்சின் மேலும்

தோள் மேலும்

தொட்டிலிலும்

கட்டிலிலும்

சுமத்தி

என்னை

அன்பாக வளர்த்தவள் என் தாய்

துயர் நிறைந்த வேளையிலும்

என்னை அன்பாக பார்த்த தெய்வம் அவள்

அவளின் திறமையாலே

நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்

நான் கடந்த ஜென்மத்தில் புண்ணியம்

செய்திருக்க வேண்டும்

இப்படியான தாய் எனக்கு அமைவதற்கு

எத்தனை ஜென்மங்கள் ஆனாலும்

இவளுக்கு நான் மகனாகப் பிறக்க வேண்டும்

என்பதே எனது ஆசை

இறுதியில் அவளது பாதத்தில்

நான் உயிர் துறக்க வேண்டும்