"அழியாத நினைவுகள்" : உயிர் வளர உதிரம் தந்து உறக்கம் மறந்து தாலாட்டி மெய்வலி பாராது மேனி தடவி

December 14, 2015

 உயிர் வளர உதிரம் தந்து

உறக்கம் மறந்து தாலாட்டி

மெய்வலி பாராது மேனி தடவி

அகல் விளக்காக ஒளி வீசி

அகத்தை துலங்க செய்து

அன்பினால் ஆண்ட அம்மாவே!

இல் வாழ்வை முடித்து

இறையடி சேர்ந்தாலும்

அழியா உன் நினைவுகளால்

எம் உள்ளம் ஆக்கிரமிக்கப்பட

முன் தோன்றும்

முகங்களிலெல்லாம்

உன் முகம் தெரியுதம்மா!

 

மங்களம் மனோரஞ்சன்,
கல்முனை 02.