மண் : கடவுள் தந்த உலகில் -நான் மூன்றில் ஏழுபங்கு

February 25, 2016

மண்

 

கடவுள் தந்த உலகில் -நான்

மூன்றில் ஏழுபங்கு

ஆனால் கடலைவிட

நான் பெரும் பங்கு

 

என்னை யார் என்று தெரிகிறதா?

நான் தான் மண்

மனிதர்களே என்னை நேசியுங்கள்

கலையுலகில் சிலை வடிக்க

களிமண்களில் கலை நயம் படைத்திட

பற்பல கண்ணாடிகள்

உருவாக்கிட நானே அபயம்

 

ஏனோ என்னை மலிவாக

எண்ணுகிறார்கள் மானிடர்கள்

உயிருள்ள வரை நான்

உன் காலடியில் கிடப்பேன்

உன் உயிர் பிரிந்தால்

நீ என் காலடிக்கு

வந்திடுவாய் மறவாதே

இப்படிக்கு மண்

 

கு.கரீஸ்,
மட்டக்களப்பு.