பெண்ணே……! : கடவுளால் கொடுக்கப்பட்ட அரிய பொக்கிஷமாம் பேதை இவள்!...

March 08,2016

 

பெண்ணே……!

 

கடவுளால் கொடுக்கப்பட்ட

அரிய பொக்கிஷமாம்

பேதை இவள்!

 

பாரினிலே உதித்த

கடவுளுக்கு ஒப்புவமை

பெண் இவளோ!

 

கண்ணிற்கு தெரியாத

தேவன் வானில்

கண்முன்னே தெரியும்

தெய்வம் பாரினிலே!

 

கருவறையில் சுமந்தாள்

குழந்தைதனை

மனதறையில் சுமந்தாள்

அன்புதனை

 

தாய்மை எனும்

ஸ்தானத்தை பெற்று

தரணியிலே உதித்த

ஒரு அற்புதமே

இந்த பேதை மகள்!

 

பிறந்தாள் நல்ல

பிள்ளையாக

மணந்தாள் நல்ல

மனைவியாக

உதித்தாள் நல்ல

தாயாக!

 

தான் பெற்ற இன்பத்தை

உலகறிய வைத்த இவள்

தான் பெற்ற துன்பத்தை

நெஞ்சுக்குழியில் புதைத்திடுவாள்

இந்த பேதை மகள்!

 

ஏற்றிடுவோம் இவளை

அரியணையில்

உயர்த்திடுவோம்,

உலகுதனில்

இந்நன் நாளிலே!

 

எஸ்.கலைச்செல்வி