கண்ணே மணியே ....!

March 08,2016

கண்ணே மணியே என்றான்

கனவில் கண்டவுடன்

மானே தேனே என்றான்

மீண்டும் நேரில்

 

காணாவிட்டால் கைபேசியில்

கண்கள் கலங்குது என்றான்

அதெல்லாம் கல்யாணத்திற்கு முன்பு

இதெல்லாம் கல்யாணத்திற்கு பின்பு

(அவளின் நிலை )

 

கண்ணிருந்தும் குருடாய்

காதிருந்தும் செவிடாய்

வாயிருந்தும் ஊமையாய்

மக்களை பெற்றெடுப்பதற்கு

மட்டும் மெஷினாய்

 

என்று தீருமோ இந்த அவலம்

அன்றுதான் (உண்மையான) மகளிர் தினம் உதயம்!!!!!!

திருமதி. சந்திரா,
கிராண்பாஸ்.