காற்றே ! நீ எங்கிருந்து வருகிறாய்? என்னை இதமாய் அடிக்கடி தழுவுகிறாய்,

May 05, 2016

காற்றே !

நீ எங்கிருந்து வருகிறாய்?
என்னை இதமாய் அடிக்கடி தழுவுகிறாய்,
உன்னை காண முயன்று தோற்றுப்போனேன்
உன்னை தொட இயலவில்லை,
பிடிக்கவும் முடியவில்லை.....
என்னுள்ளே சென்று
என் இதயத்தை தீண்டிவிட்டு
சொல்லாமல் வெளியே சென்றுவிடுகிறாயே,
ஓரிடத்தில் நில்லாமல்
ஏன் அங்கும் இங்கும்
ஓடிக் கொண்டிருக்கிறாய்,
பூக்களை சிணுங்கவும்
மரங்களை ஆடவும் செய்கிறாயே எப்படி?
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்
உயிர்வாழ்வதே உன்னால் தானே,
சூரியன் பகலிலும்
சந்திரன் இரவிலும்
மட்டுமே முகம் காட்ட
நீயோ சிறிதும் ஓய்வின்றி
கால நேரம் பாராமல் உழைக்கிறாயே........