பயணப் பாதையிலே

June 22, 2015

 


பொறுமை
வெறுமையே
பரிசளிக்கும் போது
பாலைவனத்தில்
நிழல் தேடி
நிம்மதியற்று
தவிக்கும்
தருணங்கள் ஏராளம்

நம்பிக்கையெனும்
அச்சாணி
அகன்றோடிப் போனாலும்
பிடித்த இதயங்கள்
அடி வைக்க
ஆறுதல் தரும்போது
தூரத்தே  விடியலும்
தெரிவதுண்டு

காலக்கண்ணாடியில்
அவமானங்கள்
அடிக்கடி கல்லெறிந்தால்
சிதறுண்ட
சிதறல்களில்
நண்பர் முகம்
நான் கண்டு
உடைந்து போனதுண்டு

ஏட்டுக் கல்வியில் மட்டும்
எப்படி பார்க்கும்
புராணக் கதைகளாய்
புரியாத உறவுகளை 
அறிய முடியாமல்

அல்லலுறுகின்றேன்
வட்ட நிலா
வான் வெளியில்
இரவு போட்ட கோலத்தை
காலையில் எழுந்தோடி
கசிந்துருகி தேடும்
கதிரவன் போல்
இல்லாத சிலதை தேடி
இப்படித்தான் அலைகிறேன்

 

பா.ரிசாந்தன், 
ஹொப்டன்.