அப்பா.... நீங்கள்

July 02, 2015

 

 


எட்டு  வைத்த போது
இடறி விழாது 
எட்டிப்பிடித்து - எமை
கை தூக்கி விட்டீர்

வாழ்வில் நல்லது கெட்டது
வாகாய் எமக்குணர்த்தி
வாஞ்சையோடு எம்குறை அறிந்து
நிறைகள் பல செய்தீர்

சோர்ந்த போதெல்லாம் - எமை
சோர்விலாத உந்தன் சொற்கள் 
சொல்லிலடங்காத சேவைகள் - மூலம்
சேர்த்து  விட்டீர் மனதில் தெம்பை

அறியாப் பருவம்
அறியாமை இருளை
அறிவால் அழிக்கும்
அஸ்திரங்கள் பல  சொல்லித்தந்தீர்

இருளில் ஒளியாகி
தெரிந்த பாதையில் வழியாகி
அடைதல் பல நாம் காண
அவஸ்தைகள் அனுபவித்தீர்

அன்றும் இன்றும் என்றும்
ஆண்டவனின் அருளோடும்
உங்கள் அக்கறையோடும் கயிறு பற்றி
இக்கரைகள்  பல நாம் கண்டிடுவோம்

 

அன்பு மகள் 
ஸஹ்ரானா சத்தார்
நீர்கொழும்பு