நண்டுகளின் கவிதை

September 25, 2015மணலின் உள்ளிருந்து
வருகின்றன
நண்டுகள்
யாருடைய பாதங்களிலும் 
அகப்படாமல்
கடற்கரை மணலில்– நண்டுகள்
கவிதைகள் எழுதுகின்றன
அலை கூடலாம் குறையலாம்
ஆனால்
நண்டுகள் கவிதை எழுதிக்கொண்டே
இருக்கும்
அதை அலை மெதுவாக
உக்கிரமாக அழித்துக்கொண்டே
இருக்கின்றன
கடற்கரை அழகாக இருப்பதற்கு
என அலை சொல்லலாம்
ஆனால் நண்டுகளின் கனவுகளை
எழுதும் முன் அலைகள்
எடுத்து செல்கின்றன
அலையில்லாத கடல்கள்
இப்போதெல்லாம் இல்லை
அலைகளின் ஆதிக்கம்
கடற்கரையில் கோபங்கொண்டால்
கரையின் கதை கடலினுள்
நண்டு எழுதி எழுதி
ஏமாந்து போகின்றன


எஸ்.பி.பாலமுருகன்,
பதுளை.