மித்­திரன் சிறு­க­தை : அம்மாவே தெய்வம்...!

July 01, 2015

 காலை மணி பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. வாய்க்கு வந்த இசையில் ஏதோ பாடலொன்றை இசைத்தவாறு 'அஹ்ஹஹ்ஹா ஹிஹிசி...' என்று சிரிக்கத் தொடங்கினாள் சஞ்சனாவின் தாயார் வேணி. 

மாணவப் பருவமென்பது எல்லோருக்கும் இனிமையாய் சந்தோஷகரமாய் அமைந்துவிடுவதில்லை என்பதை உணர்ந்தவள்தான் சஞ்சனா.

வாழ்க்கையில் சிறு வயதிலேயே வறுமையில் பாதிக்கப்பட்டவள்.

அதனால் ஏற்பட்ட துன்பம்,  துயரம், விதி காட்டும் கோர முகம் எல்லாவற்றையும் ஒன்றாக அனுபவித்துவிட்­டாள். 

வேணி மன நலம் குன்றிய தாய். சஞ்சனாவின் வயது 24. மீன் விழிகளும் எடுப்பான தோற்றமும் அவளின் தங்க நிற உடலுக்கு மேலும் மேலும் அழகைக் கொடுத்தது.

என்றாலும் என்ன செய்ய எப்போதும் துன்பத்தி­லேயே ஆழ்ந்­தி­ரு­ந்­தாள். 
சஞ்சனா ஐந்­தாம் தரம் படிக்கும் போது அவளுக்கு வயது பத்தைத் தாண்டியிருந்தது.

தாயின் நிலைமை என்னவென்றறிந்து கொள்ளக்­கூ­டிய பருவம்தான் அது.

மனநலம் குன்றிய தாய் வேணியை மற்றவர்கள் கேலிப் பொருளாக்கிச் சிரிக்கின்றார்களே என ஏதுமறி­யாத நிலை­யிலி­ருந்­த தன் தாயை அனுதாபத்துடன் சஞ்சனா புரிந்து கொள்ளத் தொடங்கிய வயது. 

ஆனால் வேணியின் கணவர் சாந்தன் எப்போதும் தன் மனைவியின் மீது எரிந்து விழுந்துகொண்டே இருந்தார். அவளின் செய்கைகளைக் கண்டு மனம் கொதித்தெழுவார்.

சில நேரங்களில் இடியப்பம் அவித்து பக்கத்து வீடுகளுக்குத் தான தர்மம் செய்துவிட்டு வருவாள்.

அதனால் சாந்தனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். 

"ஏய் வேணி, நீ என்ன காரியம் செய்து வாராய்? எவ்வளவு கஷ்டப்பட்டு ஒழைச்ச காசெல்லாம் இப்படி கரியாக்கி அநியாயம் பண்ணுறியே.

இது உனக்கே நல்லா இருக்கா?" "இது என்ன ஒங்கட கதை. என்ட அப்பா மட்டக்களப்பில் இருந்து அரிசி அனுப்புவினம். அதை வெச்சி நான் மாவாக்கி இடியப்பம் செஞ்சி தர்மம் செய்யிறேங்க. இதத்தானே கடவுளும் செய்யச் சொல்றார்.

இதிலென்னங்க தப்பிருக்கு" வேணியின் பதிலிது.

சாந்தனும் விடவில்லை. "ஓம்... ஓம்... உன்ட அப்பன் அரிசி அனுப்புறாறென்று நீ நெனைச்சிக்கிட்டிருக்காய். உன்ட செத்துப்போன அப்பனா அரிசி அனுப்பப்போறான் என்ன விசர் கதை கதைக்கிறாய் நீ.

அந்த றோட்டாலே போற வாறவையளுக்கெல்லாம் ஹோர்லிக்ஸ், வீவா என்றெல்லாம் கரைச்சி கரைச்சிக் குடுக்கிறீயே.

இப்போ இதெல்லாம் விக்கிற விலைக்கு இன்னுமின்னும் குடுத்துக் கொண்டே இரு... இப்படியே போனால் நாங்களும் கையேந்தி திரிய வேண்டிவரும்" என்று இரைந்தார் சாந்தன். 

இன்னுமொரு நாள் பிச்சைக்காரன் ஒருவன் வந்து "அம்மா, என்ட ஒடம்பை மூட சட்டை எதுவுமில்லையம்மா. ஐயாட பழைய சட்டை எதுவுமிருந்தால் தாங்கம்மா" என்றதும் சாந்தனின் புதுச்சட்டைகளில் ஒன்றைத் தூக்கிக் கொடுத்துவிட்­டாள்.

இப்படி வேணியின் குறும்­­பு­க­ளுக்கு அள­வில்­லாமல் போய்­விட்­டது. கோபம் தாங்க முடி­யாது சாந்தன் சில நாட்கள் வேணியை கண்மண் தெரியாமலும் அடித்­துள்­ளான்.

அடிகளை வாங்கிக் கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் தாயின் நிலை­யை சஞ்சனாவும் 2 அண்ணன்மார்களும் அக்கா மலர்விழியும் செய்­வ­த­றி­­யாது கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் பத்து வயது நிரம்பியிருந்த அம்மா மீது இரக்கம் கொண்ட சஞ்சனாவினால் இச்செயலைப் பொறுக்க முடியாமல் போய்விட்டது. 

உடனே சாந்தனை நோக்கி "அக்கா மலர்விழி ஏ. எல். பரீட்சை எடுத்திட்டாள்தானே.

இனி அவள் பாடசாலை போகமாட்டாள். பகல் வரைக்கும் அம்மாவை அக்கா பார்த்துக்கொள்ளட்டும்... பிற்பாடு நான் பாடசாலை விட்டு வந்ததும் பார்த்துக்கொள்றன்.

அப்பா எங்களப் பெத்த தெய்வத்துக்கு இனி எந்த அநியாயமும் நடைபெற விடவேமாட்டோம்" என்று அழுதழுது கூறி­னாள் சஞ்சனா. 

"நல்லாத்தான் இருக்கும். என்ன சஞ்சனா நீயா அம்மாவைப் பாத்துக்கப்போற?" "அப்பா உங்கட பணத்துக்கோ பொருட்களுக்கோ இனி எந்த பாதிப்பும் வரா­தப்­பா. அது மட்டும் உறுதி.

இதுக்குத்தானே அம்மாவ நீங்க இந்த அடி அடிச்சீங்க" என்று கூறிவிட்டு தான் அன்றிலிருந்து வேணிக்கு அம்மாவாகவும் சேவகியாகவும் தோழியாகவுமிருந்து சேவை புரிந்து வருகிறாள் சஞ்சனா. 

வேணியின் முகத்தில் மலர்ச்சி கண்டால் பன்மடங்கு மகிழ்ச்சி சஞ்சனாவின் முகத்தில் மலரும்.

கண்ணீர் வந்தால் மட்டும் அவளது இதயம் கல­ங்­கும். அந்தளவுக்கு அம்மாவின் மீது அக்­க­ரையும் பாசமும் வைத்திருந்தாள் சஞ்சனா.

தாய் மன நலம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தும் சஞ்சனாவின் அண்ணன்மார்கள் இருவரும் கனடா சென்று செட்டிலாகிவிட்டார்கள்.

அக்கா மலர்விழியும் திருமணம் நடந்த கையோடு லண்டன் சென்றுவிட்டாள்.

தான் அன்போடு வளர்த்த பாசப்பறவைகள் கூட்டை விட்டுப் பறந்து சென்ற பின் சுயநினைவற்ற தாயை தன்னந்தனியே இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சஞ்சனாவின் தலையில் விழுந்த போது அவளுக்கு வயது 19. 

இப்­ப­டி­யாக ஆறு மாதங்கள் கடந்துவி்ட்­ட­ன. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சாந்தன் இவ்வுலகை விட்டும் மறைந்தார்.

சாந்தன் காலமாகி பத்து நாட்களின் பின்னர் மூத்த மகன் தயாபரன் மட்டும் கனடாவிலிருந்து வந்தான்.

வந்ததும் அம்மாவைத் தேற்றிவிட்டு தங்கை சஞ்சனாவின் கையில்  ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்ததும் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவனுக்கென்று ஒரு குடும்பம் கனடாவிலிருக்கும் போது தாயையும் தங்கையையும் பார்க்க அவனுக்கு நேரம்தான் ஏது.

அண்ணன்மார்களும் அக்காவும் அனுப்பும் சொற்பப் பணத்தில் சஞ்சனா தன் தாயைப் பராமரிக்கக் கூடியதாகவிருந்தது.  

அன்று சஞ்சனாவின் அத்தான் முறையுள்ள டாக்டர்  மனோகர் தன் நண்பனான டாக்டர் சுதாகரனை சஞ்சனாவின் வீட்டிற்கு அழைத்து வந்தான்.  

சஞ்சனாவிடம் "இவர் என் நண்பர். டாக்டர் சுதாகரன் 28 வயதிலேயே கைராசிக்கார டாக்டர் என்று பெயர் எடுத்தவர். வேணி மாமியை ஒருக்கா காட்டலாம் என்று கூட்டி வந்தனான் என்று அறிமுகப்படுத்தினான் சுதாகரனை.

சஞ்சனா தலை நிமிர்ந்து சுதாகரனைப் பார்த்தாள். அவனது வெள்ளை நிறம். எடுப்பான  அழகிய வதனத்துடனான தோற்றம் எடுத்த எடுப்பிலேயே அவளை ஆட்கொண்டு இவ்வுலகையே மறந்தாள்.

"என்ன சஞ்சனா, ஆடாம அசையாம இருக்கே. மாமிட்ட எங்கள கூட்டிச் செல்லேன்" என்றதும்தான் இவ்வுலகத்தை உணர்ந்­தாள் அவள்.

வேணியைப் பரி­சோ­தி­த்­து­விட்டு விடை­­பெற்றுச் சென்ற சுதாகரனையே போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று வீட்டுக்­கு சென்றதும் சுதாகரனுக்குள் ஒரு தடு­மாற்­றம் ஏற்­பட்­ட­து. அவன் வீட்டில் எங்கு பார்த்தாலும் சஞ்சனாவின் முகமே தெரிந்தது. 

அதன் பின்னர் நண்­பனின் துணை­யில்­லா­ம­லேயே சஞ்சனாவின் வீட்டுக்கு சென்று  வேணிக்குச் சிகிச்சையளித்­து­வந்­தான் சுதாகரன்.

இப்­ப­டி­யாக இரு­வ­ருக்­குள்ளும் காதல் மலர்ந்­த­து.

என்றாலும் தாயின் மீது வைத்திருந்த பற்று பாசத்தினால் சுதாகரனிடம் தன் காதலைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

அவளது எண்­ணத்தில் முழுதாய் நிர­ம்­பி­யி­ருப்­பவள் அவ­ளது அம்மா வேணியே. அவள்தான் தெய்வம். எனி­னும் தாய் வேணியின் இத­யத்தில் சுதா­க­ரனுக்­கென தனித்­து­வ­மான இட­மொன்று ஒதுக்­கப்­பட்­­டு­விட்­டது. 

ஒருநாள் சுதா­கரன் தன் காத­லுக்கு முடி­வொன்றை எதிர்­பார்த்து சஞ்­ச­னா­­வின் வீட்­டுக்கு வந்து தனது எண்­ணத்தை தெரி­வித்­தான்.

அவ­ளால்­ எந்த முடி­வை­யும் சட்­டென கூற முடி­யாத நிலையே அப்­போது காணப்­பட்­டது.

"இறைவன் போட்ட கணக்கை யாராலும் மாற்­ற­மு­­டி­யா­து. சஞ்சனா, இத்தனை நாட்கள் நீ உன் தாயை கண்ணுக்குக் கண்ணாகக் காத்தது போதும்.

இனி உன் தாயை நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்" என்று சுதா­க­ரன் கூறினான். அவ­ளுக்குள் ஒரு மகிழ்ச்­சி. 

சுதா­க­ர­னின் வார்த்­தை­களில் உள்ள அர்த்­தத்தை உள்­ளு­ணர்­­வுடன் உணர்ந்த அந்தத் தாய் கட்­டிலில் படுத்­தி­ருந்­த­வாறு இரு­வ­ரையும் அருகில் அழைத்து பேசுவ­தற்­கும் சக்­தி­யின்றி வெறும் புன்­ன­கையை மட்டும் தந்­து­விட்டு இன்­பமாய் உயிர் பிரிந்­தாள்.

சஞ்­சனா தெய்­வ­மான தன் தாயை கட்­­டிப்­பி­டித்து கதறி அழுதா­ள். 
 


எம்.எம். அலிஅக்பர்,
கிண்ணியா.