மித்­திரன் சிறு­­கதை : தவறிய கால்கள்

September 15, 2015
"என்ன சுசீலா... இவர் எப்ப பார்த்தாலும் இருமிக்கிட்டே இருக்கிறார். சரியா சாப்பிடுறதில்லையா? தூங்குறதில்லையா. சே... இஞ்சப் பார் சொல்லிட்டேன்.

இன்னக்கி  இந்த வீட்டில நான் இருக்கணும்... இல்ல உங்க அப்பா இருக்கணும். நீதான் முடி­வெ­டுக்க வேணும். உன் கையிலதான் இருக்கு" என கடிந்­துவிட்டுச் சென்றான் சுரேஷ். 

இதையெல்லாம் கேட்டும் கேட்காதது போல் இருந்தார் ராஜேஸ்.

இதற்கு மேல் இங்கே நாம் இருப்­ப­து சரிப்பட்டு வராது என  எண்ணிய ராஜேஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

மகள் சுசிலா எவ்வளவு தடுத்தும் தனது முடிவை மாற்றிக்­கொள்­ளவில்லை.

தன்னை பெற்­றவர் தள்ளாடி நடப்பதை பார்க்க சக்­தி­யில்­லாமல் தேம்பி அழுதாள் அவள். அன்றிலிருந்து அப்பா எங்கே போனார், என்ன ஆனார் என்று அவள் அறிய­வில்­லை. ராஜேஸ் வீட்­டி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்­ட­திலிருந்து எந்த விட­யத்­திலும் பிடிப்­பின்றி இருந்தாள் சுசிலா.

அவளுக்கு எல்லாமே அப்பாதான். எப்போதும் சுசிலாவின்  பெய­ரையே உச்­ச­ரித்துக் கொண்­­டி­ருப்பார். தன்னால் முடி­யா­விட்­டா­­லும் சுசி­லாவின் வேலை­களில் தானும் பங்­­கெ­டுத்துக் கொள்­வார். இவ்­வா­றான தகப்­பனின் செயல்களை எண்­ணி அவர் வீட்­­டில் இல்­லாத தரு­ணத்தில் அவ­ள் வேத­னை கொண்­டாள்.

"எப்ப பாரு அழுதுக்கிட்டேயிருக்கு. அவர் எங்கே போகப் போறார். இங்குதான் எங்கையாவது இருப்பார். இந்தக் காசைக் கொண்டு போய் பீரோவில் வை" என்று ஏவி ஓரி­டத்தில் அமர்ந்­தி­ருந்த சுசி­லாவுக்கு வேலை­ கொடுத்­தான் சுரேஷ். பெரு­ந்­தொ­கை­யான பணத்தை பார்த்ததும் "ஏதுங்க இவ்­வ­ளவு பணம்?­" என பதற்றத்துடன் கேட்டாள்.

"இது உனக்கு தேவை­யில்­லாத விசயம். நான் என்ன சொல்­றேனோ அதை மட்டும் செஞ்சா போதும்..." என்று சுரேஷ் சொன்­னதும் பதில் கூறாது தலையசைத்தவாறு சென்றாள் சுசீலா. இதுதான் இவர்­களின் வாழ்க்கை முறை. இப்­ப­­டி­யா­­கவே நாட்­களும் நகர்ந்­தன.

நாளுக்கு நாள் அவனின் செயல்க­ளில் மாற்­றங்­களை உணர்ந்­தாள் சுசிலா. திடீர் என ஒரு நாள் அலு­வ­ல­கத்­திலிருந்து வந்தவன் "சுசீலா... சுசீலா..." என கொஞ்சம் வித்தியாசமான தொனியில் அழைத்தான்.

"ஏன் ஒரு நாளும் இல்லாத சந்தோஷம் இன்னைக்­கு" எனக் கேட்டாள் சுசீலா. ­"சுசீலா, உனக்கு ஒரு குட்­ நி­யூஸ்" "என்ன குட் நியூஸ்?" "எங்கட ஒபிஸ் மூலமா எனக்கு கனடால பெரிய வேலை ஒன்னு கிடைச்சி­ருக்­கு. இன்னும் ரெண்டு நாளையில நான் அங்க இருக்­க­ணும்" என்றான் சுரேஷ்.

அவ­­னது இன்பக் களிப்பு அவளுக்கு துன்­பத்தை வர­வ­ழைத்­த­து. வார்த்­தை­களால் எத­னையும் வெளிக்காட்டாமல் மௌனமாய் இருந்­தாள். "என்ன சுசீலா? இவ்வளவு சந்தோஷமான விசயம் சொல்றேன்.

ஒன்னும் பேசாமல் நிக்கிறாய்" என்றான் சுரேஷ். "இப்ப எதுக்குங்க இந்த கனடா பய­ணம். நமக்குத்தான் ஏரா­ள­மான சொத்து இருக்­கே.

நீங்­களும் கை நிறைய சம்பாதிக்­கி­றீங்­க. அது போதா­தா?­" "இல்ல சுசீலா... நான் லட்ச லட்ச­மா கோடி கோடியா சம்பாதிச்சு கொடி கட்டிப் பறக்கணும்.

இதுதான் என்னுடைய கன­வு" என்று ­பே­ரா­சையின் உச்­சத்தில் நின்று கதைத்தான் சுரேஷ்.

எப்படித் தடுத்தும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்­ள­வில்­லை.

கனடாவுக்கு  சென்று உழைப்­பினால் கிடைத்த பணத்தில் குறித்த தொகையை மனை­விக்கு அனுப்­பி­னான்.

பணத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஒரு பக்கம் அப்பாவைப் பற்­றி­ய சிந்தனை.

மறுபக்கம் கணவரின் பிரிவு. படுத்தும் நித்திரையின்றி புரண்டு கொண்­­டி­ருந்­தாள் சுசீலா.

கணவன் வெளிநாட்டில் பணத்தை தேட மனை­வி­யோ சொந்த நாட்டில் அன்புக்­கு­ரி­ய­வர்­களை தேடித் திரிந்­தாள். அவனுட­ன் பழ­கிய அந்த இனிய நாட்­களை மீட்டியப­டி அனைத்­தை­யும் எண்ணத் திரையில் காட்­சிப்­ப­டுத்­தி­னாள்.

திடீர் என சுய நினைவுக்கு வந்த சுசீலா எல்லாம் வெறும் கனவு என அறிந்து பெருமூச்சு விட்டு எழுந்து வீட்டு வேலைகளில் ஈடு­பட்­டாள்.

ட்ரிங்... ட்ரி­ங்­... டெலிபோன் மணியொலித்­தது. எடுத்து "ஹலோ..." என்றாள். "ஹலோ சுசி... நான் சுரேஷ்.

உனக்கு ஒரு குட் நியூஸ். நாளைக்கு நான் ஊருக்கு வாறேன்" என்றான் சுரேஷ். இதைக் கேட்ட சுசீலா சந்­தோ­ஷத்தில் திக்­கு­முக்­கா­­டினாள். கண­வனின் வரு­கையை எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்தாள்.

சுரேஷ் இப்­­போது தன் சொந்த மண்ணில்... சொந்த வீட்­­­டில்... வந்தவுடனே சுசீலா தான் சமைத்த உணவை கண­வ­னுக்கு இன்­­மு­கத்­துடன் பரிமாறினாள். அப்போது சுரேஷ் தனக்கு உடல் பலவீனமாயிருப்ப­தாக கூறி­னான்.

"நாம இன்னைக்கே ஒரு நல்ல டாக்டரைப் பார்ப்போம்" என்றாள் சுசீலா.

இரு­வ­ரும் வைத்­தி­ய­சா­லையை அடைந்­தனர். அங்கே அவர்­க­ளுக்கு ஒரு பேர­திர்ச்சி காத்­தி­ருந்­த­து. "என்ன டாக்டர் சொல்றீங்க?" "ஆமா சுசீலா... இதப்பத்தி நான் உங்­க­­கிட்ட விரிவா பேசணும்" என்றார் டாக்டர்.

"சுசீலா... உங்க கணவருக்கு வந்த நோய் ரொம்ப மோச­மா­ன­து. யாராலும் குணப்படுத்த முடியாத நோய்" "என்ன டாக்டர் சொல்றீங்க!" "ஆமா சுசீலா. உங்க கணவர் அங்கே மனம் போன போக்கில் சென்றிருக்கின்றார்.

அதுதான் இந்த நோய்க்கு காரணம்" என்றார் டாக்­டர். "இதைக் குணமாக்க வேற வழியேயில்லையா?" "இருந்தா நான் சொல்­லி­யி­ருப்­­பே­­னே" மருத்­து­வர் கூறிய ஆலோசனைகளை கவ­ன­மாக கேட்டுக் கொண்டிருந்தாள் சுசீலா.

"எனக்கு இப்படியொரு நோயா?" என்று தனக்குள் எண்­ணிக்­கொண்டான் சுரேஷ். மருத்­து­வ­ருடன் சுசிலா பேசிக்­கொண்­­டி­ருந்­த அனைத்­தை­யும் அவன் கத­வ­ரு­கி­­லி­ருந்து கேட்­டு­விட்­டதால் பெரும் மன வேத­னைக்கு ஆளா­னான். இரு­வரும் கனத்த இத­யத்­துடன் வீடு திரும்­பினர்.

மருத்­துவ ஆலோ­சனைப்படி அனைத்தும் நடந்­தது. நாளுக்கு நாள் சுரேஷின் உடல் பலவீனமடைந்து­ வந்­த­து.

அன்று யாரோ அழைப்­பது போன்ற சத்தம் வரவே சமை­ய­ல­றை­யி­லி­ருந்து சுசிலா வெளியே வந்து பார்த்தாள். அதை அவளால் நம்ப முடி­ய­­வில்லை. என்ன ஆச்சரியம்... கண்­ணெ­திரே நிற்­பவர் அவ­ளின் அன்­புத்­தந்தை ராஜேஷ். தான் இத்தனை நாட்­க­ளாக பக்கத்து ஊரில் உள்­ள வைத்­தி­யரின் வீட்­­டி­லேயே தங்கி வந்­த­தா­கவும் தனது நோய் வைத்­தி­யரால் குண­மாக்­கப்­பட்­ட­தையும் கூறி இன்­புற்றார்.

தான் இத்­தனைக் காலம் தேடிய­லைந்த உறவு கண் முன் நிற்­பதை எண்ணி இரட்­டிப்பு சந்­தோஷம் கொண்­டாள். இரு­வ­ருக்குள் இருந்த சந்­தோஷம் சுரேஷின் கதையை பகிர்ந்து கொண்­டதில் காணாமல் போன­து.

மாமனார் மனம் தவித்துப் போனார். 

சுரேஷின் அருகே சென்று ராஜேஷ் அழுத வண்ணம் ஆறுதல் கூறினார். "நீங்கள் இல்லா இவ்வுலகம் வெறுத்துப் போய்விடும். இவ்வளவு வயதாகியும் நான் இருக்கின்றேன்.

உம் உயிரா கடவுளுக்கு வேண்டும்?" என கூறி அழுதார் ராஜேஷ். மாமாவின் அன்பின் ஆழ­த்தை உணர்ந்­த மரு­மகன் அவ­ரின் இரு கைகளையும் பற்றிக் கொண்­டான்.

"நான் செஞ்ச எல்லா துரோ­கத்­தையும் மன்­னி­யுங்க மாமா.  இத்­தனை நல்­ல­வ­ரையா நான் வீட்டை  விட்டு விரட்­டினேன். பணம்... பணமுன்­­னு இருந்தேன். இப்ப எந்தப் பணத்­தக் கொடுத்து உயிரை  மீட்கப் போறேன்?" என்று வருந்­­தி­ய­வனை தோளோடு அனைத்துக் கொண்டார்  ராஜே­ஷ்.

 

கே.எம். மஹ்ரூப்,
கிண்ணியா 05.