மனித மூளையிலுள்ள நரம்புகளுக்கு நிகரான கணனிகள் உருவாக்கம்..!

June 08, 2016


பல்வேறு தலைமுறைக் கணனிகளை உருவாக்கிய மனிதன் தற்போது தன்னைப்போன்றே சிந்திக்கும் ஆற்றல் உடைய கணனிகளை உருவாக்குவதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றான்.

இதன் அடிப்படையில் மனித மூளையைப் போன்றே சிந்தித்து செயலாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவு கொண்ட கணனிகளை உருவாக்கும் முயற்சி 2008ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தினை நெருங்கிவிட்டதாக Northwestern பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித மூளையிலுள்ள நரம்புகளுக்கு நிகரான இலத்திரனியல் சுற்றுக்களைக் கொண்ட இந்த தொழில்நுட்பமானது RAM, Flash நினைவகங்கள் போன்று அல்லாது தகவல்களை நிரந்தரமாக சேமித்து வைக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது