ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள செய்மதிகளை தாக்கி அழிப்பு லேசர் கதிர்கள்

March 02,2018

விண்வெளியி லுள்ள எதிரிகளின் செய்மதிகளை சுட்டு வீழ்த்தக்கூடிய அதிசக்தி வாய்ந்த லேசர் கதிர்களை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா நேற்று முன்தினம் புதன்கிழமை உரிமை கோரியுள்ளது.

எதிர்வரும் ஒரு சில வருடங்களில் உலகின் வல்லரசு நாடுகளாகவுள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளி போரொன்றில் களம் இறங்கும் அபாயமுள்ளதாக அமெரிக்க விமானப் படைத் தலைவர் ஒருவர் எச்சரித்தமைக்கு மறுநாளே மேற்படி லேசர் கதி ரின் உருவாக்கம் தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அரசாங்கத்தின் ஆயுத உற்பத்தி நிறுவனமான அல்மாஸ் அன்டே செய்மதிகளை தாக்கி அழிக்கக்கூடிய லேசர் முறைமையின் விருத்தியை பூர்த்திசெய்துள்ளதாக அநாமதேய வட்டாரமொன்றை மேற்கோள்காட்டி ரஷ்ய இன்டர்பக்ஸ் செய்திமுகவர் நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த லேசர் கதிர் தாக்குதலுக்காக பெயரிடப்படாத புதிய வகை விமானமொன்று பயன்படுத்தப்படவுள்ளதாக அந்த முகவர் நிலையம் கூறுகிறது.

ரஷ்யாவானது விண்வெ ளியிலுள்ள செய்மதிகளை இலத்திரனியல் ரீதியாக குறுக்கீடு செய்யவோ அல்லது அதன் செயற்பாட்டை நேரடியாக பாதிக்கவோ கூடிய ஆயுதங்களை அபிவிருத்தி செய்து வரு வதாக அல்மாஸ் அன்டேயின் பொது வடிவமைப்பாளர் பாவெல் சொஸினோவ் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.